பனீர் _ அரை கப்
பீஸ் _ ஒரு கப்
வெங்காயம் _ ஒன்று
தக்காளி _ சிறியதாக ஒன்று
காய்ந்த மிளகாய் _ 2
இஞ்சி,பூண்டு விழுது _ 1 தேக்கரண்டி
மஞ்சள்த்தூள் _ 1/2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் _ 1 தேக்கரண்டி
கறிமசாலாத்தூள் _ 1/2 தேக்கரண்டி
கரம்மசாலாத்தூள் _ 1/4 தேக்கரண்டி
சோம்பு தூள் _ 1 தேக்கரண்டி
தேங்காய் பால்பவுடர் _ அரை கப்
எண்ணெய் _ 4 தேக்கரண்டி
மல்லி தழை _ சிறிதளவு
*** செய்முறை ***
பனீரை கழுவி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
வெங்காயம் தக்காளியையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும் காய்ந்த மிளகாய்,கறிவேப்பிலையை இரண்டு மூன்றாக கிள்ளி போட்டு உடனே நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
வதங்கியதும்,இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
பின்பு தூள் வகைகளை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விட்டு,பீஸையும்,பனீரையும் சேர்த்து மிதமான தீயில் மூன்று நிமிடங்கள் விட்டு விடவும்.
பின்பு ஒன்றரை டம்ளர் தண்ணீரில் தேங்காய் பால் பவுடரை கரைத்து அதில் ஊற்றி தேவையான அளவு உப்பும் மல்லிதழையும் சேர்த்து குக்கரை மூடி ஸ்டீம் வந்ததும் வெய்ட் போட்டு ,குறைந்த தீயில் வைத்து பத்து நிமிடம் கழித்து இறக்கவும்.
சிம்பிளாக சீக்கிரமே செய்யகூடிய சுவையான பீஸ்,பனீர் மசாலா ரெடி.
சப்பாத்தி,நாண்,குப்பூஸ் இவைகளுக்கு ஏற்ற சைட் டிஷ் ஆக இருக்கும்.
அன்புடன்,
அப்சரா.
8 comments:
ellaam irukku. senjcu paaththuttu solren :)
good one !
ஈஸியா இருக்கு ருசியாவும் இருக்கும்னு நினைக்கிறேன்.
என் இல்லத்திற்க்கு வருகை தந்துள்ள அன்னு அவர்களை வருக வருகவென வரவேற்க்கிறேன்.
செய்து பார்த்துட்டு எப்பைட் இருந்ததுன்னு சொல்லுங்க...
நன்றி..
அன்புடன்,
அப்சரா.
தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி பிரியா...
அன்புடன்,
அப்சரா.
வாங்க மஹா...,ஆமாம் செய்வது மிகவும் எளிது... அவசரத்திற்க்கு கை கொடுக்கும் ரெஸிபி...(வீட்டில் பனீரும்,பீஸும் இருந்தால்...)
கருத்துக்கு மிகவும் நன்றி மஹா...
அன்புடன்,
அப்சரா.
அப்ஸரா,பட்டாணி சீக்கிரம் வெந்துடுமே..குக்கர்ல போட்டா குழைஞ்சுடாதா? உங்க காலிப்ளவர் குருமா குக்கர்ல வச்சு,ரொம்ப குழையவச்சுட்டேன்.அதான் டவுட்டு!;)
மஹி... பீஸ் முழுதாகதான் பார்க்க இருக்கும்.சாப்பிட நல்ல சாஃப்ட்டாக இருக்கும்.இல்லை உங்களுக்கு அவ்வளவு சாஃப்ட்டாக வேண்டாமென்றால் வெறும் கடாயிலேயே செய்து கொள்ளலாம்.இப்படி நான் செய்தது மூலம் என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்து போனது.என் வீட்டில் திடீர் என்று வெஜ் தோழி வந்து விட்டனர்.அவர்களுக்கு சப்பாத்தியோடு இந்த காம்பினேஷன் தான் செய்து வைத்தேன்.மிகவும் அவர்களுக்கு பிடித்திருந்தது.அவசரத்திற்க்கு இந்த முறை இருந்தாலும் நன்றாகவும் உள்ளது என்றுதான் உங்களோடு இங்கே பகிர்ந்து கொண்டேன்.குக்கரின் டைமை கூட குறைத்து செய்து கொள்ளுங்கள்.
கருத்துக்கு நன்றி மஹி..
அன்புடன்,
அப்சரா.
Post a Comment