இந்த பேரை மும்பை பகுதியில் வசித்தவர்கள்,அங்கே போய் வந்தவர்கள் என்று யாரை கேட்டாலும் தெரியாமல் இருக்காது. *** பாவ் பாஜி *** போன்றே இந்த *** வடா பாவ் *** -ம் மும்பையில் மிகவும் பிரபலம்.இதை எனது நெருங்கிய தோழி (மும்பையை சேர்ந்தவர்..)ஒருவரிடம் மூலம் தெரிந்து கொண்டேன்.அதை ஒரு சில மாற்றங்களுடன் நான் செய்து பார்த்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
தேவையான பொருட்கள்
ரவுண்ட் பன் _ 4
உருளைகிழங்கு _ 2
வெங்காயம் _ 1
பச்சைமிளகாய் _ 2
பூண்டு _ 2 பல்
பிரட் _ ஒன்று
பிரட் _ ஒன்று
கறிவேப்பிலை _ ஒரு கொத்து
பெருங்காயத்தூள் _ சிறிதளவு
மஞ்சள்த்தூள் _ 1/2 தேக்கரண்டி
எண்ணெய் _ பொறித்தெடுக்க
*** மாவு கரைசலுக்கு ***
கடலை மாவு _ அரை கப்
அரிசி மாவு _ 2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் _ 1 தேக்கரண்டி
ரெட் ஃபுட் கலர் _ சிறிது
பெருங்காயத்தூள் _ கால் ஸ்பூன்
உருளைகிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.வெங்காயம்,பச்சைமிளகாய்,பூண்டு,கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
ஒரு வானலியில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடு வந்ததும்,நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம்,பூண்டு மற்றவைகளையும் போட்டு மஞ்சள்த்தூள்,பெருங்காயத்தூளும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
வதங்கியபின்,மசித்த கிழங்கையும் ,பிரட்டை நன்கு உதிர்த்து போட்டு,தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்கு ஒன்று சேர கிளறி நன்கு சூடேறி ஓரளவிற்க்கு செட்டானதும் இறக்கி ஆறவைக்கவும்.
மாவு கரைக்க கொடுத்த பொருட்களையெல்லாம் ஒன்று சேர்த்து கலந்து பஜ்ஜி மாவு பதத்திற்க்கு கொஞ்சம் திக்காக கலந்து வைத்து கொள்ளவும்.
ஆறிய கலவையை எலுமிச்சை அளவு உருண்டையாக எடுத்துகொண்டு தட்டி (பன் அளவிற்க்கு) வைத்துக் கொள்ளவும்.
பிறகு வானலியில் பொறிப்பதற்க்கு தேவையான எண்ணெயை ஊற்றி சூடு வந்ததும்,ஃபிரிட்ஜில் வைத்திருப்பதை எடுத்து ஒரு வடையை பஜ்ஜி மாவில் மெதுவாக முக்கி இரண்டு பக்கமும் மவில் மூழ்கியதும் எண்ணையில் போடவும்.மாவில் முக்கும்போது கலவை களறாத அளவிற்க்கு பார்த்து கொள்ளவும்.
அதற்க்குள் பன்னை இரண்டாக பிளந்து லேசாக பட்டரை உள் பக்கமும்,வெளி பக்கமும் தடவி தவாவில் டோஸ்ட் செய்து வைத்து கொள்ளவும்.
அந்த பன்னிற்க்குள் கெட்ச்சப்புடனோ... மின்ட் சட்னியுடனோ பொறித்தவடையை வைத்து மூடி பறிமாரவும்.
குழந்தைகளுக்கு குட்டி பன் வாங்கி அதற்கேற்றார் போல் வடை செய்து ஸ்கூலுக்கும் கொடுத்து அனுப்பலாம்.
குழந்தைகளும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
அன்புடன்,
அப்சரா.
14 comments:
Looks yummy. Romba nalla irukku:-)
Supero super...
Reva
ஆஹா...பேரை கேட்டதுமே ஓடி வந்துட்டேன்...அதெப்படி தமிழ் பம்பாய்க்கு பார்ஸல் ஆச்சேன்னு ஹா..ஹா.. கலக்குங்க :-))
எனது இல்லத்திற்க்கு வருகை தந்ததற்க்கு முதலில் வருக வருக என வரவேற்க்கிறேன் வீணா....
உங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி.
அன்புடன்,
அப்சரா.
மிக்க நன்றி ரேவா....
அன்புடன்,
அப்சரா.
ஜெய் சகோதரரே...
அடடே...ஓடி வந்தீங்களா அடி ஏதும் படலையே... ஹீ... ஹீ....
தமிழ் எங்கு போகும், எதிலும் இருக்குமுல்ல.... மும்பை என்ன ஜூ ஜூ பி....
சரி வந்தது வந்திட்டீங்க.... இருந்து ஒரு வடாபாவ் சாப்பிட்டு போங்க சகோதரரே....
அன்புடன்,
அப்சரா.
அப்சரா மாலை நேர உணவுக்கு நல்ல ஈசியான செய்முறையை சொல்லியிருக்கீங்க
செய்து பார்க்கிறேன்
வடா பாவ் பேரு கேள்விபட்டிருக்கிறேன்,ஆனால் சாப்பிட்டதில்லை,குளிருக்கு ஈவினிங் ஸ்னாக்ஸாக ரொம்ப நல்லா இருக்கும்,நாளைக்கே செஞ்சு பார்க்கிறேன்.
வாங்க ஆமினா...,நலமா?
தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.முடிந்த போது செய்து பார்த்துட்டு சொல்லுங்க...
அன்புடன்,
அப்சரா.
ஆமாம் ஷமீமா...,இந்த குளிர் காலத்தில் சாப்பிட நன்றாக இருக்கும்.முயன்று பார்த்துட்டு எப்பைட் இருக்குன்னு சொல்லுங்க சரியா....
அன்புடன்,
அப்சரா.
அருமையான மாலை நேர டிபன்.
தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஸாதிகா அக்கா..
அன்புடன்,
அப்சரா.
you have an award waiting for u in my blog... do collect it.. u deserve a lot more... keep up the good work.
Reva
மிகவும் நன்றி ரேவா...
உங்களை போன்றவர்களின் கருத்துதான் எனக்கு ஊக்கமளிக்கும் என நினைக்கிறேன்.
தங்களுக்கு எனது நன்றிகள் பல....
அன்புடன்,
அப்சரா.
Post a Comment