Tuesday, March 15, 2011

மிக்ஸ்டு ஜூஸ்


இப்போது வெயில் காலம் ஆரம்பித்துவிட்டது.இனி தண்ணீரும் நிறைய அருந்த வேண்டும்.வெளியே எங்கே சென்றாலுமே நம் கண்கள் தேடுவது ஏதாவது சில்லுனு குடிக்க மாட்டோமா என்பதைதான்.வீட்டில் இருப்பவர்களுக்கும் உடலில் ஏற்படும் வெப்பத்தினால் மிகவும் சோர்வடைந்து விடுவார்கள்.அப்போது ஒரு பன்னிரண்டு மணியளவில் சில்லுன்னு ஒரு ஜூஸோ,மோரோ குடித்தால் ஸ்..ஸ்... சும்மா அப்படி இருக்கும்.ஏதோ ஒரு புத்துணர்வு வந்தது போன்று உணர்வோம்.வேலைகளும் வேகமெடுக்கும்.வயிற்று உபாதைகள்,டாய்லெட் பிரச்சனைகளில் இருந்தும் காத்துக் கொள்ள இது போன்ற ஜூஸ்கள் நல்ல பலனளிக்கும்.அந்த வகையில் நான் முதலில் இந்த மிக்ஸ்டு ஜூஸின் செய்முறையை கொடுத்துள்ளேன்.நிறைய பேருக்கு தெரிந்தாலும் தெரியாதவர்களுக்கு பயன்படுமே...பழங்கள் சாப்பிடாத குழந்தைகள் அல்லது பெரியவர்களுக்கு கூட இது போன்று ஜூஸ் போட்டு கொடுக்கும் போது ம்ம்ம்ம்...யம்மி யம்மி என குடிப்பார்கள்.

சரி போதும்ப்பா மொக்கை.... செய்முறையை சொல்லுங்கன்னு சலித்து அலுத்து போகாம இந்த செய்முறையை பார்த்து ஜூஸ் போட்டு குடிச்சு ஃப்ரஷ்ஷாக ஆயிடுங்க சரியா.... 
 
*** தேவையான பொருட்கள் ***

மாதுளைப்பழம்                         _         ஒன்று
பச்சை அல்லது சிகப்பு ஆப்பிள்  _   ஒன்று
ஆரஞ்சு பழம்                                       _    பெரியதாக ஒன்று
சில்லென்ற பால்                               _    அரை டம்ளர்
சில்லென்ற தண்ணீர்                       _     கால் டம்ளர்
சீனி                                                           _   தேவைக்கேற்ப

*** செய்முறை ***

ஜூஸர் மிக்ஸி ஜாரை எடுத்துக்கங்க.அதில் நன்கு கழுவிய ஆப்பிளை நறுக்கி போட்டுக்கங்க.மாதுளையின் முத்துக்களையும் உதிர்த்து போட்டுக்கங்க.
ஆரஞ்சு சுளைகளையும் உரித்து போட்டுக்கங்க.தேவையான அளவு சீனி அல்லது சீனி சிரப்பையும் சேர்த்து மிக்ஸியை நன்றாக ஓடவிடுங்கள்.
நன்கு அரைப்பட்டதும் பாலையும்,தண்ணீரையும் ஊற்றி நன்கு அடிக்கவும்.பிறகு புளி வடிக்கட்டும் வடியில் (நைசாக இல்லாமல் கொஞ்சம் ரவை போன்ற துளை இருக்கும்.) ஊற்றி வடிக்கட்டவும்.வடிய நேரம் எடுக்கும் என்பதால் ஒரு ஸ்பூனை கொண்டு கலக்கி கொண்டிருந்தால் சீக்கிரம் வடிந்து விடும்.வேண்டுமானால் இன்னும் கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்.  
சுவையான சத்தான மிக்ஸ்டு ஜூஸ் தயார்.இதன் சுவை ரொம்ப நன்றாக இருக்கும்.டயட்டில் இருப்பவர்கள் சீனிக்கு பதில் தேனை சேர்த்துக்கலாம்.சில்லென்று விரும்பாதவர்கள் நார்மலான குளிரில் இருக்கும் பாலையும்,தண்ணீரையும் சேர்க்கவும்.

4 comments:

apsara-illam said...

சகோதரர் மதுரை சரவணன் அவர்களே..,தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.

அன்புடன்,
அப்சரா.

Unknown said...

நல்ல குறிப்பு,இன்னும் கோடை சமாளிக்க நிறைய ஜுஸ் வகைகள் குறிப்பு குடுங்க.

apsara-illam said...

வாங்க ஷமீமா..,நீண்ட நாட்களாக காணவில்லையே...
தங்கள் கருத்து கண்டு மகிழ்ச்சி.நிச்சயம் இன்னும் சில ஜூஸ்களை கொடுக்க முயலுகின்றேன்.நேரம் தான் வேண்டும்.
மிக்க நன்றி மா.

அன்புடன்,
அப்சரா.

இந்திரா said...

இன்றைய வலைச்சரத்தில் தங்களுடைய இந்தப் பதிவினைப் பகிர்ந்துள்ளேன்..

நேரமிருந்தால் வருகை தாருங்களேன்..


http://blogintamil.blogspot.com/2011/08/4.html

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out