இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.வீட்டில் பார்ட்டி என்றால் குழந்தைகளுக்கு ஸ்பெஷல் அயிட்டமாக இதை செய்து வைக்கலாம்.பெரியவர்கள் கூட மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
ஈத் பெருநாள் வந்தாலே சிங்கப்பூரில் ஒரு மாதம் கொண்டாட்டம் தான்.மலாய் மக்களின் பழக்கப்படி இந்த ஒரு மாதமும் குடும்பத்துடன் தங்கள் அனைத்து உறவினர்களின் வீட்டிற்கும் சென்று வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.அப்படி எல்லோரும் போக,வர இருப்பதால் எல்லோர் வீட்டின் டைனிங் டேபிளிலும் டப்பா டப்பாவாக ஸ்னேக்ஸ் செய்தோ,வாங்கியோ வைத்திருப்பார்கள்.வருபவர்கள் அதில் இருப்பதை டேஸ்ட் செய்து விட்டு காஃபியோ,ஜூஸோ குடித்துவிட்டு சென்று விடுவார்கள்.
இப்ப எதுக்கு இந்த கதை என்கிறீர்களா?அந்த மாதிரி வைத்திருக்கும் ஸ்னேக்ஸில் இதுவும் ஒன்று.அதை எனது இல்லத்தில் பதிவிடவே விரும்புகிறேன்.
இப்போது அதன் செய்முறையை பார்க்கலாமா?
தேவையான பொருட்கள்
**********************
டார்க் சாக்லெட் - 100 கிராம்
பட்டர் - 1/4 கப்
மைதா(அ)ஆல் பர்ப்பஸ் ஃப்ளோர் - 3/4 கப்
கொக்கோ பவுடர் - 2 மேசைக்கரண்டி
பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி
கண்டன்ஸ்ட் மில்க் - 1/2 டின்
பொடித்த சீனி - 1/2 கப்
வால்நட் - பொடியாக நறுக்கியது ஒரு கையளவு
செய்முறை
**********
பட்டர் ரூம் டெம்ப்ரேச்சரில் இருக்க வேண்டும்.
பட்டரையும்,சாக்லெட்டையும் மைக்ரோவேவ் பாத்திரத்தில் போட்டு மைக்ரோவேவ் ஹையில் ஒரு நிமிடம் வைத்து எடுத்தோமேயானால் பட்டர் உருகியும்,சாக்லெட் லேசாக உருகியும் இருக்கும்.அந்த நிலையில் அதை வெளியில் எடுத்து நன்கு கிளறிவிட்டோம் என்றால் நன்கு சாக்லெட் அந்த சூட்டிலேயே கரைந்து விடும்.அதை ஒன்று சேர கலந்து விட்டு அதில் கண்டன்ஸ்ட் மில்க்கையும் ஊற்றி கலந்து விட்டு பிறகு மைதா,கொக்கோ பவுடர்,பேக்கிங் பவுடர் மூன்றையும் ஒன்றாக கலந்து ஒரு முறை சலித்து விட்டு சாக்லெட் மிக்ஸில் சீனியையும்,இந்த மாவையும் சேர்த்து நன்கு ஒன்று சேர கலந்து விடவும்.அதன் பின் நறுக்கிய வால்நட்டில் பாதியை இதில் கலந்து விடவும்.
இப்போது ஓவனை 180டிகிரியில் முற்சூடு செய்யவும்.கேக் ட்ரேயில் பட்டர் முழுவதுமாக தடவி விரும்பினால் பட்டர் பேப்பர் போட்டுவிட்டு அதில் இந்த கலவையை பரவலாக கொட்டி ஒரு இன்ச் அளவு உயரம் இருக்கும்படி தட்டி விட்டு மீதி இருக்கும் வால்நட்டை தூவி விடவும்.
அதை முற்சூடு செய்த ஓவனில் வைத்து 30 முதல் 35 நிமிடம் வரை வைத்து எடுக்கவும்.(எனக்கு 30 நிமிடத்தில் ரெடியாகி விட்டது.எனவே அவரவர் ஓவனிற்கு தகுந்தார் போல் நேரத்தைப் பார்த்துக்கொள்ளவும்.)
இதன் நடுவில் டூத் பிக் வைத்து சோதித்து பார்த்து விட்டு வெளியே எடுத்து விடவும்.சூடாக இருக்கும் போதே துண்டுகள் போட்டு எடுத்து விட்டு ஆறியதும் பாக்ஸில் போட்டு வைத்து கொள்ளலாம்.
இளஞ்சூடாக இருக்கும் போதே சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.இதன் டேஸ்ட் கேக்குகள் போல் இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக சிவ்வியாக இருக்கும்....
முயன்று பாருங்களேன் நிச்சயம் பிடிக்கும்.
குறிப்பு:)
*******
சாக்லெட் ,பட்டரை டபுள்பாயிலர் முறையில் உருக்கச்செய்யலாம்.

1 comment:
ஆஹா சாக்லேட் ப்ரவுனி ரொம்ப சூப்பராக இருக்கு அப்சரா
Post a Comment