தேவையான பொருட்கள்
பாகற்காய் - 1/2 கிலோ
வெங்காயம் - 3
மிளகாய்தூள் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பொடிப்பதற்கு:-))
அரிசி - இரண்டு கைப்பிடி
மிளகாய் வத்தல் - 4
சோம்பு - 2 தேக்கரண்டி
தாளிப்பதற்கு:-))
கடுகு - 1 தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை:-
பாகற்காயை நன்கு கழுவிவிட்டு அரிந்து வைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
நறுக்கிய பாகற்காயில் மிளகாய்தூள்,உப்பு சேர்த்து நன்கு பிரட்டி மைக்ரோவேவ் ஹையில் பத்து நிமிடம் வைத்து எடுக்கவும்.இடையில் ஒரு முறை வெளியில் எடுத்து நன்கு கிளறிவிட்டு வைக்கவும்.(எண்ணெய் குறைவாக பயன்படுத்துவதற்க்கும்,ஈரபசையை போக்குவதற்க்கும் இம்முறையில் செய்வதுண்டு.)
அதற்க்குள் பொடிப்பதற்க்கு தேவையான பொருட்களை வெறும் வானலியில் மிதமான தீயில் பொரியும் வரை வறுத்து எடுத்து ஆறவைத்து மிக்ஸியில் கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
ஒரு வானலியில் தாளிப்பதற்க்கு தேவையான பொருட்களை கொண்டு தாளித்து விட்டு பிறகு நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
ஓரளவு வதங்கியதும் பாகற்காயை சேர்த்து நன்கு கிளறிவிட்டு உப்பு சரிப்பார்த்து சேர்த்து விட்டு குறைந்த தீயிலேயே நன்கு வதங்க விடவும்.
நன்கு உதிரியாக பொலபொலவென்று ஆனதும் பொடியில் இரண்டு ஸ்பூன் அளவு சேர்த்து கிளறி விட்டு இறக்கவும்.
தேங்காயோ,அதிக மாசாலாவோ இல்லாத சத்தான பாகற்காய் ரெடி.
குறிப்பு:-))
மைக்ரோவேவில் வைத்து எடுப்பது கட்டாயம் இல்லை.அப்படி வைக்காமலும் செய்யலாம்.மைக்ரோவேவில் வைத்தால் குறைந்த எண்ணெயிலேயே உதிரியாகவும்,சற்றே மொறுகலாகவும் இருக்கும் என்பதற்க்காக இம்முறையில் நாங்கள் செய்வதுண்டு.
2 comments:
சூப்பர் குறிப்பு.அப்சரா தொடர்ந்து அசத்துங்க.
delicious dear
Post a Comment