இந்த உலகத்தில் எங்கு பார்த்தாலும்,யாரை பார்த்தாலும் செல்ஃபோன் வைத்து கொண்டு மணிக்கணக்கில் பேசி கொள்வது என்பது மிகவும் சாதாரணவிஷயமாகி விட்டது.ஃபோன் என்ற விஷயமே பெரியதாக கருதிய மூலைமுடுக்குகளில்கூட இப்போது ஒருவருக்கு இரண்டு,மூன்று செல்ஃபோன் என புலக்கத்தில் இருந்து கொண்டுதான் வருகின்றது.அவசியத்திற்க்கு என்பது போய் பொழுது போக்கிற்க்காகவே பேசும் பழக்கமே நம்மில் பலருக்கும் இருந்து வருவது நம்மால் மறுக்கமுடியாத ஒன்று.
இப்படி இருந்து கொண்டிருக்க இதில் உபயோகம் எவ்வளவு உள்ளதோ,அதே போல் ஆபத்தும் ஓரளவு இருக்கதான் செய்கின்றது.எல்லா விஷயத்திலும் அப்படித்தானே...பல நல்லவிஷயங்கள் இருந்தாலும்,சில கெடுதலான விஷயங்கள் இல்லாமல் இருப்பதில்லை.அப்படி ஒரு விஷயம் தான் சமீபத்தில் எனக்கு மெயில் வந்த விஷயமும்... என்னை அதிர்ச்சுக்குள்ளாகி விட்டது.
ஒருவர் தன் படுக்கையறையில் செல்ஃபோனை சார்ஜரில் போட்டு விட்டு அமர்ந்திருக்கின்றார்.அந்த நேரத்தில் அவருக்கு ஒரு அழைப்பு வரவே அதன் ஒயரை விட்டு கலட்டாமலே சார்ஜ் ஏறும் பட்சத்திலேயே பேசி கொண்டிருந்திருக்கின்றார்.அப்போது ஏற்பட்ட எலக்ட்ரிக் பவர் சர்க்யூட் ஆகி அந்த நபர் தூக்கி எரியப்பட்டிருக்கின்றார்.சத்தம் கேட்டு ஓடி வந்த அவருடைய பெற்றோர்கள் வந்து பார்க்கையில் அவர் கைவிரல்களில் தீக்காயங்களோடு மயக்கநிலையில் இருந்துள்ளார்.செல்ஃபோனும் எரிந்தநிலையில் இருந்திருக்கின்றது.அவற்றை நான் சொல்வதை விட படத்தை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்களேன்.
அருகில் உள்ள மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக அழைத்து சென்று அவருக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.இந்த சம்பவம் மியாமியில் நடந்து அங்குள்ள யுனிவர்சிட்டி ஆஃப் மியாமி ஹாஸ்பிட்டல் என்ற மருத்துமனைமூலம் இந்த செய்தி வெளியாகி உள்ளது.
இது வெறும் செய்தி அல்ல நம் எல்லோருக்கும் ஒரு எச்சரிக்கை மணி என்றே சொல்லலாம்.நம்மையும் மீறி நாம் சில நேரங்களில் செய்யும் தவறுகளில் இதுவும் ஒன்று. இது போன்று பேட்டரி லோ என்று காட்டும் போது ஏதேனும் அவசர அழைப்பு வர நாமும் தவிர்க்க இயலாமல் சார்ஜரில் போட்டுக்கொண்டே பேசி விடுவது இயல்புதான்.
நான் இரண்டு மூன்று தடவைகளில் இவ்வாறு செய்துள்ளேன்.இனி இது போன்ற தவறை செய்யும் அனைவருக்கும் இது ஒரு நல்லபாடமாக அமையும்.(முக்கியமாக எனக்கும் தான் அவ்வ்வ்வ்....) இனி நாம் அனைவரும் அலட்சியம் செய்யாமல் கவனமாக இருப்போம்.அப்புறம் பேசுகிறேன் என்றோ,இல்லை சார்ஜரை துண்டித்து விட்டோ பேச பழகிக் கொள்வோம்.
அட பாவிங்களா.......
எங்களை பயமுறுத்துறதுக்கும்
ஒருஅளவில்லாம போச்சே......
ஸ்ஸ்ஸ்ஸூ>>>>முடியல....
எல்லாவற்றிற்க்கும் இறைவன் போதுமானவன்....
1 comment:
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!
விழிப்புணர்வு பதிவு. இவ்வளவு சீரியசான செய்தியை படிச்சப்பின் கடைசியில் அந்த போட்டோ கம்மென்ட் சிரிக்க வைத்தது.
Post a Comment