Friday, November 18, 2011

ஸ்பெஷல் ஜூஸ்



ஜூஸ் வகைகளில் ஃப்ரூட்ஸ்,கேரட்,பீட்ரூட் என நாம் எவ்வளவோ பருகி கொண்டு வருகின்றோம்.பாக்கெட் மற்றும் பாட்டில் ஜூஸ்கள் அதிகமாகவே நம்மில் புழக்கத்தில் இருந்துதான் வருகின்றது.பெரும்பாலும் குழந்தைகளும் அந்த மாதிரியான ஜூஸ்களையே தான் பெரிதும் விரும்புகின்றனர்.அதையும் தாண்டி ஃப்ரஷ் ஜூஸ்க்கு உள்ள சுவையே அலாதிதான்.செய்வதற்க்கு கொஞ்சம் சோம்பேறியானாலும் அதனால் கிடைக்கும் பலனோ அதிகம்.டயட் இருப்பவர்களில் சிலர் இது போன்று ஜூஸையே காலை உணவாக உட்கொண்டு வருகின்றனர்.அப்படியிருக்க எல்லோராலும் குடித்து பழகக்கூடிய ஒரு ஜூஸ் வகையைதான் இப்போது உங்களிடம் பகிர்ந்து கொள்ள வந்துள்ளேன்.ஜூஸின் செய்முறை மட்டுமின்றி,அதனால் நாம் அடையக்கூடிய பத்து வகை பலன்களையும் அறிய போகின்றோம்.முதலில் செய்முறையை பார்க்கலாம்.





தேவையான பொருட்கள்


கேரட் ---------------------------------------------  இரண்டு
பீட்ரூட்--------------------------------------------  ஒன்று
ஆப்பிள்-------------------------------------------   ஒன்று


செய்முறை


கேரட்,பீட்ரூட்,ஆப்பிள் இவைகளின் தோலை நீக்கிவிட்டு நன்கு கழுவி துண்டுகளாக்கி கொள்ளவும்.
மிக்ஸியில் அல்லது ஜூஸரில் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு (வேண்டுமானால் சிறிது தண்ணீர் சேர்த்து) நன்கு அடித்து கொள்ளவும்.
நன்கு வடிக்கட்டி விட்டு சுவைக்கு சிறிது எலுமிச்சை சாறும்,வேண்டுமாயின் உப்பு சிறிதும் சேர்த்து கலக்கி கொள்ளவும்.
மிகவும் சத்தான ஸ்பெஷல் ஜூஸ் தயார்.



இதை நாம் அதிகாலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
இதை அருந்திய பின் ஒரு மணிநேரம் கழித்துதான் காலை உணவையே  உட்க்கொள்ள வேண்டும்.
சரி ஜூஸ் தயார்.இதன் பயன்களை அறிய வேண்டாமா..?


இதனால் நாம் அடையக்கூடிய பயன்கள்:-


1. கேன்ஸர் வராமல் தடுப்பதற்க்கும், நம் செல்களை பாதுகாக்கின்றது.
2. அல்சர் பிரச்சனகளுக்கும்,கிட்னி,லிவர்,பேன்க்ரீஸ் போன்றவைகளில் ஏற்படும் உபாதைகளிலிருந்தும் நம்மை காக்கின்றது.
3. உடம்பில் ரத்த ஓட்டத்தை சீராக்கி ஹார்ட் அட்டாக்கிலிருந்து நம்மை காத்து கொள்ள வழிவகுக்கின்றது.
4. உடம்பில் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகின்றது.
5.கண் சோர்வு மற்றும் கண் பார்வை கோளாறுகளையும் தடுப்பதற்க்கு பயனுள்ளதாக உள்ளது.
6.செரிமாண கோளாறுகளையும்,தொண்டை புண்களையும்,சுவாசகோளாறுகளையும் இது சரி செய்கின்றது.
7.எலும்பு,மூட்டு வலிகளுக்கும் இது நல்ல பலனளிக்கின்றது.
8.நம் தோலினால் ஏற்படும் உபாதைகளை போக்கவும்,நன்கு ஸ்கின்னை சாஃப்ட்டாக வைக்கவும் இது உதவுகின்றது.
9.அலர்ஜியினால் ஏற்படும் உபாதைகளுக்கும் இது நல்ல பலனளிக்கின்றது.
10. பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் அதன் வலியை போக்குவதற்க்கும்பெரிதும் உதவுகின்றது.


படிக்கும்போதே புரிந்திருக்கும்,இதில் இவ்வளவு நன்மைகளா என்று ஆச்சர்யபடவும் வைத்திருக்கும் அல்லவா...?ஏன் நாட்களை வீணாக்குவானேன்.மாத்திரை மருந்து என சாப்பிட்டு குடல் வெந்து போவதற்க்கு,இது போன்ற அரிய கைமருந்தாக விளங்கும் ஜூஸ்களை குடித்து நம்மை ஓரளவிற்க்கு காத்துக் கொள்ளலாமே.... வாங்க முயன்றுதான் பார்ப்போமே.....


[[[குறிப்பு:-]]] இந்த குறிப்பும்,விளக்கங்களும் எனக்கு தோழி ஒருவரின் மூலம்மெயிலில் வந்ததாக்கும்.அதை என் கருத்துக்களையும்சேர்த்து விரிவான தமிழாக்கத்தோடு உங்களிடையே பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.  


நன்றி....




3 comments:

Aashiq Ahamed said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
ஸ்பெஷல் ஜூஸ் என்ற தாங்களது பதிவு மிக அருமை, கேரட், பீட்ரூட்,ஆப்பிள், மூன்றையும் ஜூஸாக (கண்ணாடி தம்ளரில் உள்ளதை) பார்க்கும் போது, உடனே குடிக்கனும் என்ற ஆவலை தூண்டுகிறது, எங்கே புகைப்படத்தில் தங்களது முத்திரையை (இது அப்சராவின் இல்லம்) கானவில்லை.

சகோதரர் (ஆஷிக் அஹமத் அ) கேட்டுக் கொண்ட பிறகும், அவரது பின்னூட்டம் வெளிப்படையாக எல்லோரின் பார்வைக்கும் உள்ளதே, சகோதரி தங்களின் கவனக்குறைவா?

என்றும் அன்புடன்,
அ. ஹாஜாமைதீன்.

F.NIHAZA said...

ம்....அருமையா இருக்கு தோழி.....

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out