வளைகுடா நாடுகளில் வேகமான முன்னேற்றங்களை கொண்டுவந்ததில் யு.ஏ.இ அமீரகமும் ஒன்று.அதிலும் குறிப்பாக துபாயில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வந்தது ஆச்சர்யமே..... சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து பார்வையிடும் நாடாகவும்,தங்கத்திற்க்கு பெயர் பெற்ற நாடாகவும் இருந்து வருவது குறிப்பிட தக்கது.
இங்கே வருடந்தோறும் DSF எனப்படும் dubai shopping festival மிகவும் அனைவராலும் எதிர்ப்பார்க்கபடும் ஒன்றாகும்.இதை 1996 ம் வருடம் பிப்ரவரி 15-ம் தேதி முதன் முதலாக கொண்டாடப்பட்டது.இதை தொடர்ந்து ஒவ்வொரு வருடமும்...ஒரு மாதக்காலம் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும்.துபாய் முழுவதுமே போகின்ற ரோடுகள் எல்லாம் வர்ண விளக்குகளாலும்,விளம்பர அட்டைகளாலுமே அலங்கரிக்கபட்டிருக்கும்.
எந்த மாலுக்கும்,கடைகளுக்கும் சென்றாலே DSF SALE என்றே அறிவிப்பு பலகைகள் மின்னும்.ஜனவரி முதல் பிப்ரவரி வரை வரும் அனைத்து சுற்றுலா பயணிகளுக்கு இது கண்கொள்ளா காட்சியாகவே இருக்கும்.
ரிகா...,மொர்ரகாபாத் என்று அழைக்கப்படும் இரு பகுதிகளில் இந்த ஒரு மாதமும் நம் ஊர் திருவிழா போன்று தான் காட்சி அளிக்கும்.உள்ளே கார் கொண்டு போகும் அனைவரும் அவ்வளவு சீக்கிரம் அந்த ஏரியாவை விட்டு வெளியே வந்து விட முடியாது.... அவ்வளவு கூட்டமாக இருக்கும்.
பல கலை நிகழ்ச்சிகள்,பலவிதமான கடைகள்,ஆங்காங்கே பார்வையாளர்களின் பசியார சிறு சிறு கடைகள்,குழந்தைகளை கவரும் விளையாட்டு ஆவணங்கள்,சர்க்கஸ்கள் என சும்மா கலைகட்டும்னு வச்சிக்கங்க...
அதே போல் இந்த வருடமும் ஜனவரி 20 முதல் பிப்ரவரி 20 வரை என்று துபாய் அரசாங்கத்தால் முடிவு செய்யப்பட்டு,அதன் படியே நடைப்பெற்று கொண்டும் இருக்கின்றது....
நான் இங்கு இருந்து கொண்டிருக்கும் இந்த பத்து வருடத்தில் முழுவதுமாக ரசித்து ஜாலியாக பார்த்தது என்னவோ குழந்தைகள் வரும் வரைதான்.... அதன் பின் வெளியில் போவது என்பதே குறைந்து விட்டது...போனால் அடுத்து பத்து நாட்களுக்கு மருந்தும் கைய்யுமாகதானே இருக்க வேண்டியுள்ளது... சரி அது எதற்க்கு இப்ப...
இந்த வருடம் சரி வெளியில் போக வேண்டாம்... மால் எங்கேயாவது சென்று ஏதேனும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் அங்கே செல்லலாம் என்று முடிவு செய்து சென்றோம்.( 5-ம் தேதி சனிக்கிழமை அன்று)எல்லா மால்களிலுமே ஏதேனும் கலை நிகழ்ச்சிகள்,ஆட்டம் பாட்டம் என நடந்து கொண்டுதான் இருக்கும்.எனவே நாங்கள் சில மாதங்களுக்கு முன்பு மிர்தீஃப் எனப்படும் இடத்தில் திறக்கப்பட்டிருந்த சிட்டிசெண்ட்டருக்கு இதுவரை செல்லாததால் அங்கே சென்றோம்....
துபாயில் வித்தியாசமாகவும்,அழகாகவும் பல மால்கள் இருப்பது போன்றே... இந்த சிட்டி செண்ட்டரும் அதிலும் மிக பிரமாண்டமாகவும் இருந்தது.இரவு நேரங்களில் அந்த இடத்தை கடந்து செல்லும்போதே கார் பார்க்கிங்கின் விளக்கு வெளிச்சம் மட்டுமே கண்கூசும் அளவிற்க்கு அதிக அளவில் இருக்கும்.உட்புறம் கேட்க்கவா வேண்டும்..?
அப்பப்பா... மிக அழகான வடிவமைப்போடும்,மேல்பகுதிகளில் கண்கவரும் வெவ்வேறு வகையான டிசைன்களோடும் காட்சி அளித்தது.சுருக்கமா ஒரு கிராமத்தார் ஸ்டைலில் சொல்ல வேண்டுமானால்... “இந்த இடத்தை முழுசா சுத்தி வரவே மூணு வேளையும் கட்டி சோறு கட்டிட்டுள்ள வரணும்” என்பது போன்ற இடமாகும்.... குழந்தைகளை கூட்டிட்டு முழுவதும் எங்களால் உலா வரமுடியவில்லை என்றாலும் ஓரளவிற்க்கு பார்வையிட்டு வந்தோம்.
மால்கள் என்றாலே வெளிநாடுகளில் நிச்சயம் இருப்பது ஃபுட் கோர்ட்டும்,ப்ளே ஸ்டெஷனும்தான்.இங்கும் அது இருந்தது.குழந்தைகளை விளையாட நாமும் அங்கே எட்டி பார்க்காமல் இருக்க முடியவில்லை.நுழைந்த ஆரம்பத்திலேயே வியக்கதக்க ஒரு காட்சி கண்முன்னே.... ஆமாங்க... ஒரு கண்ணாடி சூழப்பட்ட அறைக்குள் மனிதன் பறந்து கொண்டிருக்கின்றாரே... அவரை பிடித்து கொண்டு இன்னொருவரும் சேர்ந்து பறந்து கொண்டிருந்தார்.... என்னவென்று கவனிக்கையிலேதான் தெரிந்தது... அந்த பொழுதை களிக்கும் வித்தையின் பெயர் ஐ-ஃப்ளை(i fly) என்று... அதற்க்கென்று ஒரு உடையை அவர்களுக்கு கொடுத்து அணிய சொல்லி ஒரு குறிப்பிட்ட இடத்திற்க்கு போய் நிற்க்க சொல்லி அதி வேகமான காற்றை செலுத்துகிறார்கள்.அது அவர்களை பறக்கசெய்கின்றது.
சிறுவயதினருக்கும்,கொஞ்சம் பயப்படுவர்களுக்கும் ஒரு ஆள் பிடித்து கொள்கிறார்... தைரியசாலிகள் பிடிமானம் இல்லாமல் அதி வேகமாகவும் உயரமாகவும் பறக்கின்றார்கள்.என்னமா யோசிக்கிறாங்கன்னு நினச்சிட்டு நகர்ந்து போய் குழந்தைகளை விளையாட வைக்க ஆயுத்தமானோம்.
அரபியர்கள் ஐநூறு,ஆயிரம் திர்ஹம் என்று செலவழித்து விளையாடவைக்கும் இடமாச்சே.... இங்கு அதுவும் சர்வசாதாரணமாகவே காசு கரியாகும்... சரி நம் பிள்ளைகளும் கொஞ்சம் விளையாடி மகிழட்டும் என்று விட்டோம்.(அதுவே 100 திர்ஹம்) அந்த இடத்திலேயே அரபியர்களின் மெய்டுகளின் உதவியோடு ஒன்று,இரண்டு வயது குழந்தைகள் எல்லாம் விளையாட ஒரு தனி இடம் வேறு உண்டு....
இதெல்லாம் உங்க பார்வைக்கு ஒரு சில ஃபோட்டோக்கள் இங்கே கொடுத்துள்ளேன்....
இதெல்லாம் முடித்து வெளியே மற்றொரு இடம் நோக்கி சென்றோம்.
இங்கே DSF க்கான சிறப்பு நிகழ்ச்சியில் இன்று சீன,ஜப்பானியர்களின் கலைநிகழ்ச்சி நடைப்பெற்றது.இந்த நாட்டில் இவர்களின் பங்களிப்புகள் அதிகம் இருக்கும் என்றே சொல்லுவேன்.என்ன திறமை அவர்களுக்கு.... சின்ன சின்ன விஷயங்கள் கொண்டே நிறைய அபூர்வ அமைப்புகளை தருபவர்கள்.... இந்த நிகழ்ச்சியில் இசையின் அழகான வெளிப்பாடு.... அதிர வைக்கும் இசை இல்லை.... பிரமாண்டமான கீ போர்ட்,ட்ரம்ஸ் என்றெல்லாம் இல்லை.ஒரு புல்லாங்குழல்,அவர்களின் பாரம்பர்ய இசைகருவியாக இரண்டு..(எனக்கு அதன் பெயர் தெரியதுங்கோ....) அதை வைத்து அவர்களின் திறமையை வெளிபடுத்தியதை வெறும் வார்த்தைகளால் சொல்ல முடியாது...
இதன் நடுவே நடனம் வேறு அழகிய உடைகளோடு அழகாக பொம்மை போன்று அசைந்தாடி சென்றனர்.ஏதோ இந்த வருட DSF-ல் இதையாவது கண்டு களிக்க முடிந்ததே என்று நினைத்து அதனை உங்களுக்கு ஒரு சில படங்களை க்ளிக் செய்து வந்தேன்.இதோ அதுவும் உங்கள் பார்வைக்காக....
இன்னும் ரசிக்க எத்தனையோ விஷயங்கள் இந்த DSF-ல் இருக்கின்றது.... அவற்றையெல்லாம் சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது பல புகைபடங்களோடு சொல்கிறேன்..... இப்போது பொறுமையாக இதை படித்தவர்களுக்கு நன்றியை சொல்லி கொண்டு விடைபெறுகிறேனுங்க.....
அன்புடன்,
அப்சரா.
8 comments:
photos superb apsara..
ஹைய்யா...,அப்ப நல்லா ஃபோட்டோ எடுத்திருக்கேனா...? மிகவும் நன்றி மஹா....
அன்புடன்,
அப்சரா.
அழகாக அருமையாக விளக்கிருக்கிங்க,எனக்கு ஒரு ரவுண்ட் வந்தாப்பல இருக்கு,பிள்ளைகள் பெரிசானபுறம் படிப்பு,ஸ்கூல்,டுயூசன் என்று இப்ப எங்கும் அசைய முடியலை,யாராவது கெஸ்ட் வந்தால் அவர்களோடு நாங்களும் போய் வருவதோடு சரி.
சலாம் ஆசியா அக்கா...,தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி... ஆமாம் வெளியில் கிளம்புவது என்பதே ஒரு ஸ்டேஜுக்கு அப்புறம் பெரிய விஷயமாக தானே இருக்கின்றது....
அன்புடன்,
அப்சரா.
naangkalum appadi thaan paa piLLaikaL perusaanathaal veliyil engkum selvathillai
சலாம் ஜலீலா அக்கா..,தங்கள் வருகைக்கும்,கருத்திற்க்கும் நன்றி.
அன்புடன்,
அப்சரா.
சலாம் அப்சரா.. வீட்டில் பிள்ளைகளும் அண்ணனும்நீங்களும் நலமா?
நான் ருக்சானா,சூப்பராக இருக்கு துபாய்.போட்டோக்கள் எல்லாம் அருமை வாழ்த்துக்கள் ....
வ அலைக்கும் சலாம் ருக்சானா..,
வெறும் படத்தை மட்டும் பார்த்துட்டு துபாயை ரசிச்சா எப்படி?
ஒரு முறை வந்து சுற்றி பார்த்துட்டு போங்க...
தங்கள் கருத்துக்கும்,வாழ்த்துக்கும் நன்றி ருக்சானா...
அன்புடன்,
அப்சரா.
Post a Comment