Tuesday, February 8, 2011

சுபமான வைத்திய முறைகள் சில

 


இன்றைய அவசர உலகத்தில் உடலில் நோய்களும் அவசர அவசரமாகவே வந்து குடியேறிவிடுகின்றது.யாரை நலம் விசாரித்தாலும் “எங்கே ஏதோ இருக்கேன் இதற்க்கு மருந்து சாப்பிடுகிறேன்.அதற்க்கு மருந்து சாப்பிடுகிறேன்” என்ற பதிலை தான் கேட்க முடிகின்றது.
நோய் எல்லாம் நாற்பது வயதுக்கு மேல் தான் என்ற காலம் போய் இருபதிலிருந்து முப்பதுக்குள்ளாகவே ஆரம்பம் ஆகின்றது.ஏனென்றால் இன்றைய வேலை முறைகளும்,அதனால் ஏற்படும் டென்ஷனுமே காரணம்.மருந்துகள் நிறைய சாப்பிடுவதற்க்கு வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே ஒரு சில கை வைத்தியங்களை தினசரி வாழ்வில் செய்து வந்தால் ஒரு சில உபாதைகளிலிருந்து விடுபடலாம் என்று ரஷ்யாவில் இருக்கும் Dr.med.karch என்ற மருத்துவர் ஒருவர் நிருபித்து உள்ளார்.அவை என்னவென்று பார்ப்போமா…….
முதலாவதாக **** ஆயில் புல்லிங்**** 


எவ்வாறு  செய்வது :- காலையில் வெறும் வயிற்றில் (தண்ணீர் கூட குடித்திருக்க கூடாது) வாயில் ஒரு ஸ்பூன் ரீஃபைண்ட் ஆயிலோ அல்லது நல்லெண்ணெயோ ஊற்றி வாயை மூடி மெதுவாக வாயின் எல்லா இடங்களிலும் எண்ணெய் படும்படி கொப்பளிக்க வேண்டும்.இவ்வாறு பதினைந்து முதல் இருபது நிமிடம் வரை செய்து கொண்டிருந்தால் அது கொழகொழப்பின்றி தண்ணீர் நிலையிலும் வெண்மை நிலையிலும் இருக்கும்.அதை துப்பி விட்டு வெது வெதுப்பான தண்ணீரில் வாயை கழுவி விட வேண்டியதுதான்.(கொஞ்சம் கூட விழுங்கி விட கூடாது.)
இதனால் ஏற்படும் பயன் :- இதை தினசரி கடைப்பிடிப்பதால் தலைவலி,பல்வலி,வயிற்று உபாதைகள்,நுரையீரல் பிரச்சனைகள்,ஆஸ்துமா,அசிடிட்டி,அல்ஸர்,மூட்டு வலி போன்றவைகளிலிருந்து நல்ல நிவாரணம் பெற முடியும் என்று கூறுகின்றார்.
இதை ஐந்து வயதுக்கு மேற்பட்டவர்கள் முதல் செய்யலாம் என நிருபித்து உள்ளதாக கூறுகின்றார்.இதற்க்கு எல்லா சமையல் எண்ணையையும் பயன்படுத்தலாம். குறிப்பாக நல்லெண்ணெய் பயன்படுத்தினால் மிகவும் நல்லது என்றும் கூறுகின்றார்.
இரண்டாவதாக *****அசிடிட்டிக்கு*****  
 
என்ன செய்வது :- தினமும் காலையில் வெறும் வயிற்றில் எட்டிலிருந்து பத்து வரை எண்ணிக்கையில் அரிசியை வாயில் போட்டு முழுங்க வேண்டும்.மெல்ல கூடாது.
இதனால் ஏற்படும் பயன் :-  இது போல் தொடர்ந்து 21 நாட்கள் செய்து வந்தால் அசிடிட்டி தொந்தரவுகள் இருப்பவர்களுக்கு நல்ல மாற்றம் ஏற்படும்.மூன்று மாதங்கள் கடைப்பிடிப்பின் இந்த உபாதையிலிருந்து முற்றிலுமே விடுபடலாம் என்கிறார்.
மூன்றாவதாக **** கொலஸ்ட்ரால்****
இந்த கொலஸ்ட்ரால் தான் மிக பெரிய வியாதியாக உலாவி கொண்டு இருக்கின்றது.இது இருந்தால் நிச்சயம் இரத்த கொதிப்பு,ஹார்ட் சம்பந்தமான நோய்கள் இருக்கதான் செய்யும். 

என்ன செய்வது :- தினமும் நாம் சாப்பிட்டதற்க்கு பிறகு இந்த சுப்பாரியை(அதாவது படத்தில் உள்ளது போல் எந்த ஒரு வாசனை பொருளோ,வேறு ஏதும் கலக்காத வெறுமென இருக்கும் சுப்பாரி துண்டுகள்)நன்கு இருபதிலிருந்து நாற்பது நிமிடம் வரை மென்று கொண்டிருக்க வேண்டும்.சாறு மட்டுமே விழுங்க வேண்டும்.நாற்பது நிமிடம் கழித்து சக்கையை துப்பி விட வேண்டும்.
இதனால் ஏற்படும் பயன் :- நாம் மென்று விழுங்கும் சாறு உள்ளே சென்று இரத்தத்தின் அடர்த்தியை,கொழுப்பை குறைத்து லேசான இரத்த ஓட்டத்திற்க்கு வழி வகுக்கின்றது.இந்த இரத்த ஓட்டம் சீராக இருந்தாலே இதயம் சம்பந்தமான  பிரச்சனைகள்,இரத்த கொதிப்பு இவைகள் வராமல் இருக்கும்.
நான்காவதாக ***** இரத்த கொதிப்பிற்கானது ****
   இது பெரும்பாலானோர் அறிந்ததுதான்.

என்ன செய்வது :- தினந்தோறும் காலையில் உணவு எடுத்து கொள்ளும் முன்பாகவே எட்டிலிருந்து பத்துவரை உள்ள வெந்தயத்தை தண்ணீருடன் விழுங்க வேண்டும்.
இதனால் ஏற்படும் பயன் :- இரத்த கொதிப்பை குறைக்க இது மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது.
ஐந்தாவதாக  ***** சர்க்கரை நோய்(டயாபிடீஸ்) ****

             
என்ன செய்வது :- சர்க்கரை நோய் உள்ளவர்கள் பால்,சர்க்கரை சேர்க்காமல் வெறும் டீத்தூளை தண்ணீர்ல் சேர்த்து கொதிக்க வைத்து வடிக்கட்டி குடிப்பதே மிக சிறந்தது.சிலர் எலுமிச்சை இதனுடன் கலந்து ருசிக்காக குடிப்பார்கள் அதுவும் கூடாது.வெறும் கறுப்பு டீயாக தான் (சுலைமானி என்று அழைப்பர்) குடிக்க வேண்டும்.
அதே போல் வெண்டைக்காயை கழுவிவிட்டு முதல் நாள் இரவில் தண்ணீரில் இரண்டாக அரிந்து ஊற வைத்து விட வேண்டும்.பின்பு மறுநாள் காலை உணவு சாப்பிடுவதற்க்கு முன்பாகவே  இந்த ஊற வைத்திருக்கும் தண்ணீரை மட்டும் அருந்த வேண்டும்.

இதனால் ஏற்படும் பயன் :- கறுப்பு டீ குடிப்பதால் சிறுநீரக பை நன்கு வேலை செய்ய உதவியாக இருக்கின்றது.எனவேதான் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.
இந்த வெண்டைக்காயை ஊற வைப்பதால் அதன் சத்துக்களை தண்ணீர் பெற்று கொண்டிருக்கும்.இந்த தண்ணீர் சர்க்கரை நோயால் பாதிக்கபட்டவர்களுக்கு பெரிதும் உதவுகின்றது.உடலிற்க்கு மிகவும் நன்று என்று பரிசோதனை செய்து பார்த்து பலன் பெற்ற டாக்டர் கூறுகின்றார்.


இதில் குறிப்பிட்டிருக்கும் அனைத்து பொருட்களுமே நமது வீட்டில்,எளிதில் கிடைக்க கூடியவைகள்.செய்வது என்பது எளிதானவைதான்....எனவே இதை முயன்றுதான் பார்ப்போமே…..
இது எனக்கு மெயிலில் ஆங்கில வடிவில் வந்தது.இதை இங்கே வெளியிட்டால் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்குமே என்று மொழி பெயர்த்து அனுப்பியிருக்கின்றேன்.




அன்புடன்,
அப்சரா.

14 comments:

Mahi said...

பயனுள்ள தகவல்கள்!

ஸாதிகா said...

பயனுள்ள பகிர்வு.

apsara-illam said...

வாங்க மஹி..,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மஹி...

அன்புடன்,
அப்சரா.

apsara-illam said...

சலாம் ஸாதிகா அக்கா..,தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி அக்கா...

அன்புடன்,
அப்சரா.

ஆயிஷா said...

அஸ்ஸலாமு அழைக்கும்

பயனுள்ள தகவல்கள்!

குறையொன்றுமில்லை. said...

மிகவும் பயனுள்ள தவல்களுக்கு நன்றி

Anonymous said...

பயனுள்ள தகவல்கள்
நன்றி அப்சாரா..

apsara-illam said...

வ அலைக்கும் சலாம் ஆயிஷா...,எனது இல்லத்திற்க்கு வருகைதந்துள்ள உங்களை வருக வருகவென வரவேற்க்கிறேன்.
தங்கள் கருத்துக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

apsara-illam said...

வாங்க லட்சுமி அம்மா...,உங்களை அன்போடு என் இல்லத்தில் வரவேற்கிறேன்.
தங்கள் கருத்து கண்டும் மிக்க மகிழ்ச்சி.நன்றி அம்மா...

அன்புடன்,
அப்சரா.

apsara-illam said...

மஹா...,தாங்கள் படித்து கருத்தை தெரிவித்தமைக்கு நான் தான் உங்களுக்கு நன்றியை சொல்ல வேண்டும்.
மிக்க நன்றி மஹா...

அன்புடன்,
அப்சரா.

ஜெய்லானி said...

ஏங்க ஊரில எண்ணெய் விக்கிற விலைக்கு கேட்டா உதைக்க மாட்டாங்க ...!! :-))

apsara-illam said...

என்ன விலை வாசி வந்தாலும்... இங்கிலீஷ் மருந்து வாங்குற காசுக்கு இது ஒண்ணும் பெரிசு இல்லைன்னு நினைக்கிறேன்.இந்த ஆயில் புல்லிங் செய்வதால் முகம் நல்ல பொழிவோடு இருக்கும்னு இப்ப பல பெண்கள் இதை செய்ய ஆரம்பிச்சுட்டாங்க தெரியுமா சகோதரரே....

அன்புடன்,
அப்சரா.

Jaleela Kamal said...

எல்லாம் கேள்வி பட்டது தான்., ஆனால் அரிசி மட்டும் அசிடிட்டிக்கு வித்தியாசமாக இருக்கே.
யாராவது பயன் படுத்தி இருகாங்கலான்னு கேட்டு சொல்லுங்க

apsara-illam said...

உங்களுக்கு தெரியாத கைவைத்தியங்களா ஜலீலா அக்கா...
இந்த அரிசியை என் வீட்டுக்காரரின் நெருங்கிய தோழர் ஃபாலோ பண்ணிட்டு இருக்கார்.நன்றாக இருப்பதாகதான் சொல்லுகிறார்...வெந்தயம் நான் அடிக்கடி போடுவதுதான்...
நன்றி ஜலீலா அக்கா...

அன்புடன்,
அப்சரா.

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out