Saturday, February 5, 2011

சிக்கன் பிரியாணி



தேவையான பொருட்கள்

சிக்கன்                                _     1/2 கிலோ
பாஸ்மதி அரிசி                _     2 டம்ளர்(அல்லது) அரைபடி
வெங்காயம்                      _     2
தக்காளி                              _     2
பச்சைமிளகாய்                 _    ஒன்று
இஞ்சி,பூண்டு விழுது      _    2 தேக்கரண்டி
தயிர்                                     _     2 தேக்கரண்டி  
மஞ்சள் தூள்                       _    1/4 தேக்கரண்டி
மிளகாய்த்தூள்                   _    1 1/2 தேக்கரண்டி
பிரியாணி மசாலா             _     1 1/2 தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள்            _     1 தேக்கரண்டி
பட்டை                                   _    விரல் அளவு 2
ஏலக்காய்                              _     2
கிராம்பு                                   _     2
பிரிஞ்சி இலை(பே லீஃப்)  _     சிறியதாக ஒன்று
எண்ணெய்                             _    100 மிலி
 நெய்                                        _    ஒரு தேக்கரண்டி
மல்லி,புதினா தழை            _  தலா அரை கட்டு
எலுமிச்சை பழம்                   _  ஒன்று

 *** செய்முறை ***


 சிக்கனை நன்கு சுத்தம் செய்து விட்டு மஞ்சள் தூள் சிறிது சேர்த்து நன்கு மூன்று, நான்கு கழுவி விட்டு தண்ணீரை வடிக்கட்டி விட்டு அதனுடன் தயிரையும் ஒரு தேக்கரண்டி உப்பையும் சேர்த்து நன்கு பிரட்டி வைத்து கொள்ளவும்.
வெங்காயம் தக்காளியை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கி வைத்து கொள்ளவும்.பச்சைமிளகாயையும் கீறி வைத்து கொள்ளவும்.புதினா.மல்லி தழைகளையும் ஆய்ந்து தண்ணியில் போட்டு வைத்து கொள்ளவும்.   
ஒரு அகன்ற வானலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும்,பட்டை,கிராம்பு,ஏலக்காய்,பிரிஞ்சி இலை போட்டு தாளித்து பின் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பொன்னிறமாக வதங்கியதும்,இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து இரண்டு நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
பிறகு அரிந்து வைத்திருக்கும் தக்காளியையும் சேர்த்து நன்கு மசிய வதக்கி கொள்ளவும். 
 வதங்கிய பின்,மஞ்சள்த்தூள்,மிளகாய்த்தூள்,பிரியாணி மசாலாத்தூள்(பிரியாணி மசாலாவிற்க்கு பதில் அதே அளவில் கரம் மசாலாவையே சேர்த்து கொள்ளலாம்..)எல்லாம் சேர்த்து இரண்டு நிமிடம் வதங்கி விட்டு பிரட்டி வைத்திருக்கும் சிக்கனை சேர்த்து நன்கு கிளறி விட்டு பின் நறுக்கி அலசி வைத்திருக்கும் மல்லி,புதினா தழையில் பாதியையும் உப்பு சரி பார்த்து தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்கு பிரட்டி மூடி போட்டு மிதமான தீயிலேயே வேக விடவும்.

பதினைந்து நிமிடத்தில் நன்கு வெந்து மசாலாவோடு பிரண்டு இருக்கும்.அதன் பின் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
 அரிசியை கழுவி ஊற வைத்து விட்டு ஒரு பாத்திரத்தில் நான்கு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
கொதிக்கும் போது அரிசியை தண்ணீரில்லாமல் வடிக்கட்டி அதில் போட்டு சாதத்திற்க்கு தேவையான உப்பும் சேர்த்து மல்லி ,புதினா தழையில் சிறிதும் சேர்த்து எலுமிச்சை பழம் பிழிந்து வேக விடவும்.( பெரிய பழமாக இருந்தால் புளிப்பு அதிகம் பிடிக்காதவர்கள் பாதியே பிழிந்தால் போதும்)
தண்ணீர் சுண்டுகின்ற நேரம் அடுப்பை சிம்மில் வைத்து கொண்டு சிக்கன் மசாலாவை அதில் சேர்த்து அடி சாதத்தை மேலே கொண்டு பரப்பி அதன் மேல் கரம் மசாலாத்தூளை தூவி ஃபுட் கலரை ஒரு பக்கமாக போட்டு மீதியிருக்கும் நறுக்கிய மல்லி,புதினா தழையையும் தூவி நெய்யை ஊற்றி மூடியில் அலுமினிய ஃபாயிலை போட்டு மூடி அடுப்பில் ஒரு இரும்பு தோசை தவாவையோ.தம் பொடும் ப்ளேட்டையோ போட்டு அதன் மேல் சட்டியை வைத்து மூடியின் மேல் நல்ல வெய்ட் உள்ள பாத்திரம் வைத்து குறைந்த தீயில் பத்து நிமிடம் வைக்கவும்.
 பத்து நிமிடம் கழிந்ததும்,மூடியை திறந்து ஒரு பிரட்டு பிரட்டி விட்டு மறுபடியும் மூடி ஐந்து நிமிடம் வைத்து அடுப்பை அணைத்து மூடியை திறக்காமல் அப்படியே விட்டு விடவும்.
விரும்பினால் வெங்காயம் சிறிதையும்,முந்திரியையும் பொன்னிறமாக பொறித்து தூவி பரிமாறலாம்.
 சுவையான சிக்கன் பிரியாணி ரெடி... 


அன்புடன், 
அப்சரா.

15 comments:

Reva said...

paarkavae arumaiyaa irukku....
Reva

அன்புடன் மலிக்கா said...

எனக்கூஊஊஊஊஊஊஊஊஊ. தரமாட்டீங்களா அப்ஸ்..ஹூன் ஹூம் அழரேனாம் கிடைக்கலையேன்னு..சூப்பராக இருக்கிறது..

அன்புடன் மலிக்கா said...

தாங்களை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்கள்.
http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_06.html

GEETHA ACHAL said...

சூப்பர்ப்...அருமையாக இருக்கின்றது...

Anisha Yunus said...

ஆஹா மிஸ்ஸாயிடுச்சே. அடுத்த தடவை மிஸ் பண்ணாம முத ஆளா சாப்பிட்டுர்றேன்... :))

Anonymous said...

Sunday க்கு நல்ல விருந்து கொடுத்து இருக்கீங்க அப்சரா..

apsara-illam said...

முதல் வருகைக்கும்,கருத்துக்களுக்கும் மிகவும் நன்றி ரேவா....

அன்புடன்,
அப்சரா.

apsara-illam said...

சலாம் மலிக்கா...,தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி... தங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி.... என் வீட்டிற்க்கு வாருங்கள் உங்களுக்கு பெரிய விருந்தே போடுகின்றேன்.

அப்புறம் என்னையும் வலைச்சாரத்தில் அறிமுகபடுத்தியது மிகவும் பெருமையாகவும் அதிமகிழ்ச்சியாகவும் இருந்தது.மிகவும் நன்றி மலிக்கா....
போய் பார்த்து பதிவும் போட்டுவிட்டுதான் வருகின்றேன்.

அன்புடன்,
அப்சரா.

apsara-illam said...

தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிகவும் நன்றி கீதா...

அன்புடன்,
அப்சரா.

apsara-illam said...

ஹாய் அன்னு,தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.... கவலையேபடாதீங்க.... உங்களுக்குன்னு ஸ்பெஷல் விருந்தே போட்டா போச்சு...

அன்புடன்,
அப்சரா.

apsara-illam said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி மஹா...

அன்புடன்,
அப்சரா.

ஸாதிகா said...

பிரியாணி சூப்பரா செய்து இருக்கீங்க அப்சரா.

apsara-illam said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஸாதிகா அக்கா...,தங்கள் கருத்து கண்டு மிக்க மகிழ்ச்சி.மிகவும் நன்றி அக்கா...

அன்புடன்,
அப்சரா.

Jaleela Kamal said...

arumaiyaan chicken biriyani

apsara-illam said...

சலாம் ஜலீலா அக்கா...,உங்களிடமிருந்து இப்படி ஓர் வார்த்தை வருவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.மிகவும் நன்றி ஜலீலா அக்கா... வந்து பார்வையிட்டு பதிவிட்டமைக்கு...

அன்புடன்,
அப்சரா.

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out