Thursday, February 3, 2011

பரோட்டா


பரோட்டா என்றாலே அதை கைய்யாலே விசுறுவது என்பதே சிறப்பு.இதற்க்காகவே சிலர் இதை முயன்று பார்க்க மாட்டார்கள்.எங்கள் வீட்டில் நான் சிறு வயதாக இருக்கும்போதிலிருந்தே.... வீட்டில் பரோட்டா செய்வது என்றால் என் அப்பா தான்.... மலேஷியாவில் அவரின் இளமைகாலத்தில் ஒரு மிலிட்டிரி ஹோட்டலில் முறையாக கற்று கொண்டு போட்டு கொண்டிருந்தவர்.ரொம்ப சூப்பாராக போடுவாங்க....

 எங்க அப்பா மலேசியாவிலிருந்து வந்துட்டால் அடிக்கடி பரோட்டா போட்டு மாடிக்கு எடுத்து சென்று நிலா சோறு போல நிலா பரோட்டா சாப்பிடுவோம். பயங்கர ஜாலியாக இருக்கும்.என் அப்பா போடும்போதே ரசிச்சு பக்குவமா செய்வார்.... அதை பார்த்து பார்த்து எனக்கும் அதை எப்படியாவது கற்று கொள்ளணும்னு ஆசை வந்துடுச்சு.ஆனால் அப்ப முடியல.... ஆனால் அப்பாட்ட எல்லாத்தையும் கேட்டு தெரிஞ்சுக்கிட்டு இங்கே துபாய் வந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக போட ஆரம்பித்தேன்.ஒரு நேரம் வரும் ஒரு நேரம் சொதப்பிடும்.இப்படியே இருந்தது.
அப்பா இங்கு துபாய்க்கு வந்தும் செய்து கொடுத்தார்.நிறைய டிப்ஸும் சொன்னார்.அதன்படி செய்ய ஆரம்பித்ததும் இப்ப எனக்கு நிறைய பாராட்டுக்கள்..... பலரிடமும்.... அந்த சில டிப்ஸ்களோடு உங்களுக்கு இந்த பரோட்டாவை செய்து காண்பிக்கலாமுன்னு வந்திருக்கின்றேன்.

ஈஸி பரோட்டா என்று அறுசுவையில் சுத்த சைவமாக உள்ளவர்களுக்காகவும்,சுலபமான முறையிலும் செய்து காட்டியுள்ளேன்.  
முட்டை சேர்க்காதவர்கள் கீழ் கொடுத்திருக்கும் லின்க்கில் போய் பார்க்கலாம்.
 
அதன் லின்க் இதோ:-  http://www.arusuvai.com/tamil/node/14477


தேவையான பொருட்கள் 

மைதா                        _          முக்கால் கிலோ
முட்டை                    _           ஒன்று
பால்                              _          ஒன்றரை டம்ளர்
சீனி                                _         மூன்று தேக்கரண்டி
உப்பு                               _          ஒன்றரை தேக்கரண்டி  
 நெய்                              _           மூன்று தேக்கரண்டி
எண்ணெய்                   _           தேவையான அளவு

*** செய்முறை *** 


மாவை கலப்பது என்பதே எனது அப்பா செய்முறையில் வித்தியாசம் இருக்கும்.இது போல் பெரும்பாலும் யாரும் செய்திருக்க மாட்டார்கள்.இம்முறையில் பிணைவதால் ரொம்ப அடித்து பிணைய வேண்டிய அவசியம் இல்லை.நல்ல சாஃப்ட்டாக இருக்கும்.

ஒரு அகன்ற பாத்திரத்தை எடுத்து கொண்டு பாலை ஊற்றி அதில்  முட்டையை உடைத்து ஊற்றி அதிலேயே சீனி,உப்பு எல்லாம் சேர்த்து நன்கு கைய்யால் லேசாக அடித்தாற் போல் கலந்து கொள்ளவும்.
பின்பு சலித்து வைத்திருக்கும் மைதா மாவை அதில் சேர்த்து அந்த கலவையோடு பிசறி விடவும்.எல்லா மாவிலும் சேர்ந்த பின் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி பிசைந்து கொண்டிருக்கவும்.(நான் கொடுத்த அளவிற்க்கு அரை டம்ளர்க்குள்ளாகவே தண்ணீர் செல்லும்.)
போதுமான அளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து கொண்டிருக்கும் போது கைகளில் மாவு ஒட்டியிராமல் மாவு உருண்டு வந்திருக்கும் போது ஒரு வெள்ளையான மெல்லிய துணியையோ,கர்சீஃபையோ தண்ணீரில் நனைத்து பிளிந்து அந்த மாவை முழுவதும் மூடி பாத்திரத்தையும் மூடி வைத்திருக்க வேண்டும்.
 ஒரு பதினைந்து நிமிடம் கழித்து மாவை மறுபடியும் நன்கு பிசைந்தால் சாஃப்ட்டாக இருப்பதை உணரலாம்.இப்போது ஒரு பெரிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக்க தேவையான மாவை பிய்த்து இரண்டு மூன்றாக உள்நோக்கி கட்டை விரல் கொண்டு திணித்து மடிப்பது போல்  செய்து விட்டு உருண்டைகளாக்கி கைய்யில் நெய்யை சிறிது அந்த உருண்டை முழுவதும் தடவவும்.இப்படியே எல்லா மாவையும் உருண்டையாக்கி அதே போல் ஈரத்துணியை கொண்டு  மூடி வைக்கவும்.
இந்த பதத்துடன் பிணைந்து இருக்கும் மாவில் ஒரு மணிநேரத்திலேயே அவசரத்திற்க்கு வார்த்து சுடலாம்.இல்லையென்றால் பொறுமையாக மூன்று மணிநேரம் கழித்து செய்யலாம்.பொதுவாக பரோட்டா மாவு எவ்வளவு நேரம் நன்கு ஊறுகின்றதோ அவ்வளவு சாஃப்ட்டு கொடுக்கும்.
சரி இப்ப ஊறிய மாவை என்ன செய்யலாமுன்னு பார்க்கலாம்....

 ஒரு பெரிய மரவையை எடுத்து கொண்டு அதை குப்புற வைத்து அதன் முழுவதும் எண்ணெய் தடவி ஒரு உருண்டையை அதன் நடுவில் வைத்து கைகளில் எண்ணெயை தொட்டு கொண்டு பரவலாக அழுத்தி கொள்ளவும். பின்பு விசிற தெரிபவர்கள் விசிறலாம். இல்லையென்றால் அதே உருண்டையை சப்பாத்தி உருட்டு கட்டை கொண்டு எவ்வளவு மெல்லியதாக வார்க்க முடியுமோ அவ்வளவு மெல்லியதாக இட வேண்டும்.




                     
அதன் பின் இரு விரலால் எண்ணெயை தொட்டு அதில் தெளித்து விட்டு மாவை ஒரு பக்கமாக ஒன்று சேர்த்து சுருட்டி முடிவை மேல் புறம் வைத்து அழுத்தி மேலே எண்ணெய் தொட்டு வைக்கவும்.
இப்படியே எல்லா உருண்டைகளையும் செய்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு தோசை தவாவை அடுப்பில் வைத்து (இரும்பு அல்லது இந்தாலியன் தவா இருந்தால் நன்று)சூடு வந்ததும்,முதலில் சுருட்டி வைத்துள்ள உருண்டையை நான்கு விரல்களில் எண்ணெய் தொட்டு கொண்டு சமமாக அழுத்தி விடவும்.மெல்லியதாகவும் இல்லாமல் மொத்தமாகவும் இல்லாமல் பார்த்து கொள்ளவும்.அதை சூடேறிய தோசைகல்லில் போட்டு அடுப்பை மிதமான தனலில் வைக்கவும்.












மாவை பிசைவதற்க்கென்று ஒரு முறையை என் அப்பா சொல்லி கொடுத்தது போல் சுடுவதற்க்கும் ஒரு முறை உண்டு.அதையும் என்ன என்று இங்கு பார்ப்போம்.இப்ப எங்கே விட்டேன்.... ஆ.... தோசைகல்லில் வார்த்த பரோட்டாவை போட்டாச்சா.... அதன் அடி லேசாக சிவந்ததும் திருப்பி போட்டு விட்டு ஒரு தேக்கரண்டி நிறைய எண்ணெய் எடுத்து பரோட்டாவை சுற்றிலும்,மேல் புறமும் ஊற்றவேண்டும்.அப்படியே கொஞ்ச நேரம்விட்டு அடியை லேசாக தூக்கி பார்த்து சிவந்திருந்தால் மட்டுமே திருப்பி போட வேண்டும்.அதன் பின் சிறிது எண்ணெய் சுற்றி ஊற்ற வேண்டும்.இப்ப இந்த பக்கமும் பரவலாக சிவந்ததும் எடுத்து மரவையில் வைத்து (இரு உள்ளங்கைகளுக்கு நடுவே  இருப்பது போல் வைத்து) இரண்டு,மூன்று முறை அடித்து எடுத்து வைக்கவும்.இதே போல் எல்லாவற்றையும் சுட்டு வைக்கவும்.கோழி, கறி குழம்புடன் சூடாக சாப்பிட சும்மா போய்கொண்டே இருக்கும்னா பார்த்துக்கங்களேன்.....  

கவனிக்க:-)) பரோட்டாவை அதிகம் திருப்பி திருப்பி போட்டு சுட்டு எடுக்க கூடாது.மூன்றே திருப்புதான் இருக்க வேண்டும்.அதே போல் கொஞ்சம் தாராளமாக எண்ணெய் விட்டு சுட்டெடுத்தால் ஆறினாலும் சாஃப்ட்டாகவே இருக்கும்.பலருக்கும் சுட்ட பரோட்டாவை அடிக்கும் அளவிற்க்கு சூடு தாங்க முடியாது. அவர்கள் அந்த மூடிய ஈரத்துணியை பரோட்டாவின் மேல் வைத்து பிறகு அடிக்கலாம்.

இன்னும் சில டிப்ஸ்:-)) முதன் முறை முயற்ச்சி செய்பவர்கள் ஒரு கப் மாவில் முட்டை இல்லாமல் முயற்ச்சி செய்யலாம்.மூன்று பரோட்டா வரும்.மற்ற பொருட்களை அதற்கேற்றார் போல் போட்டு கொள்ளணும்.அரை கிலோ மாவிற்க்கு ஒன்பது பரோட்டா வரும். முக்கால் கிலோ மாவிற்க்கு பன்னிரண்டு,பதிமூன்று வரும்.ஒரு கிலோவிற்க்கு பதினெட்டு அல்லது இருபது வரும்.
நன்றி...

அன்புடன், 
அப்சரா.

24 comments:

அஸ்மா said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... படிப்படியா சொல்லிக் கொடுத்திருக்கீங்க அப்சரா, வாழ்த்துக்கள்! விசுறும் முறையும் சேர்த்து நான் கொடுக்கலாம் என்றிருந்தேன். நேரம்தான் கிடைப்பது கஷ்டமா இருக்கு.

அப்சரா! உங்க மெயிலுக்கு பதில் போடுகிறேன் என்று ஒரே மெயிலை உங்களுக்கு 4 முறை அனுப்பிவிட்டேன். failure message தான் வருது. பிறகு யாஹூ மெயிலுக்கு அனுப்பியவுடன்தான் இன்று failure message இல்லாமல் அப்பாடா... என்று இருந்தது :) மெயில் செக் பண்ணிவிட்டு முடியும்போது பதில் கொடுங்க.

Priya Sreeram said...

lovely ! i make the same way but a few tips from u will be incorporated in my next attempt !

Asiya Omar said...

ஆஹா அப்பா டிப்ஸ் உடன் பரோட்டா அருமை.கிட்ட தட்ட நான் கொடுத்து இருக்கும் வீச்சு பரோட்டா போல் தான் இருக்கு,உங்க முறைப்படியும் செய்யணும்.அருமை.ரொம்ப அழகாக ப்ரெசென்ட் செய்திருக்கீங்க.பாராட்டுக்கள்.

Anonymous said...

பார்க்கவே அழகா இருக்கு
எனக்கும் செய்ய ஆசையா இருக்கு

apsara-illam said...

வாங்க பிரியா...,தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி...

அன்புடன்,
அப்சரா.

apsara-illam said...

சலாம் ஆசியா அக்கா...,அடடே...உங்கள் வீச்சு பரோட்டாவை நான் இன்னும் பார்க்கவில்லையே....
தங்கள் கருத்து கண்டு மிக்க மகிழ்ச்சி... நன்றி ஆசியா அக்கா...

அன்புடன்,
அப்சரா.

apsara-illam said...

வாங்க மஹா...,ஆசையாக இருக்குன்னு சொன்னா எப்படி..?சீக்கிரம் செய்து பாருங்க....
செய்து பார்த்துட்டு சொல்லுங்க சரியா....

அன்புடன்,
அப்சரா.

ridaa said...

பரோட்டா செய்முறை விளக்கம் மிகவும் அருமை
அன்புடன்
ரிதா

Sangeetha Nambi said...

I love Parota. Need to do a try

Reva said...

super... i don't have any other words to describe your post... super.
Reva

apsara-illam said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ரிதா.

அன்புடன்,
அப்சரா.

apsara-illam said...

வாங்க... சங்கீதா தங்கள் கருத்து கண்டு மகிழ்ச்சி... நிச்சயம் செய்து பாருங்க... நன்றாக வரும்...

அன்புடன்,
அப்சரா.

apsara-illam said...

வாங்க ரேவா...,தங்கள் கருத்துக்கும் மிகவும் நன்றி.எனக்கு சந்தோஷமாக இருந்தது..

அன்புடன்,
அப்சரா.

Unknown said...

நல்லவிளக்கமா குடுத்து இருக்கீங்க.டிப்ஸ் எல்லாம் சூப்பர்.

apsara-illam said...

சலாம் ஷமீமா...,தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிகவும் நன்றி மா...

அன்புடன்,
அப்சரா.

Jaleela Kamal said...

அருமையான பரோட்டா அப்சாரா,

நானும் இது போல் தான் செய்வேன்.

என்னை அதிகம் இழுக்கும், பால்சேர்ப்பதால் பஞ்சு போல் இருக்கும்.

apsara-illam said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஜலீலா அக்கா...,தங்கள் கருத்தை கண்டு மிகவும் சந்தோஷம்.நீங்கள் சொல்வது சரிதான்...எண்ணெய் கொஞ்சம் கூட ஊற்றினால் மிகவும் நன்றாக இருக்கும்.என்தோழி கூட சொல்லுவார்.நீ செய்யும் பரோட்டாவை வெறுமெனவே சாப்பிடலாம் என்று....
மிகவும் நன்றி அக்கா...

அன்புடன்,
அப்சரா.

Mahi said...

அப்ஸரா,அறுசுவைல உங்க ரெசிப்பி பார்த்துதான் நானும் ஸாஃப்ட் பரோட்டா செய்யக் கத்துகிட்டேன்.போட்டோ கூட அனுப்பினேன் அங்கே. புதுதளத்தில் அந்த போட்டோ எல்லாம் வராது போல. என் ப்ளாக்ல போட்டோ போட்டிருக்கேன்,பார்த்தீங்களா?

அதிகம் எண்ணெய் சேர்க்கறதால் அடிக்கடி செய்யறதில்ல..இப்ப நீங்க ஞாபகப்படுத்திவிட்டுட்டீங்க! :)

apsara-illam said...

அப்படியா மஹி..,ரொம்ப சந்தோஷம்... இன்னும் நான் உங்க ப்ளாக்கில் பார்க்கவில்லை.இப்போதே பார்த்து விடுகிறேன்.கருத்திஅ என்னோடு பகிர்ந்து கொண்டமைக்கு மிகவும் நன்றி மஹி.

அன்புடன்,
அப்சரா.

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி,
முதல் முறையாக தாங்களது வலைப்பூவை பார்வையிடுகின்றேன், "புரோட்டா" செய்முறையை படித்தபோது, என்னையும் அறியாமல் என் விழியோரம் நீர் திவளைகள்...

காரணம் தாங்கள் குறிப்பிட்ட செய்முறை விளக்கம் அச்சு அசலாக எனது தந்தையின் பாணி, அவரும் மலேசியாவில் இருந்தவர், (ஹோட்டலில் அல்ல).

குறிப்பாக பெருநாளுக்கு முதல் நாள் இரவில் மாவை பிசைந்து, பஜருக்கு முன்பு எழுந்து கைய்யாலேயே விசிறி போடுவதை எனது சிறுவயதில் பார்த்து பரவசமடைந்தவன், விசுறுவதெற்கென்றே, எங்கள் வீட்டில் பெரிய மலேசிய தாம்பாளம் உண்டு.

உங்களைப் போன்றே எனது தந்தையிடமிருந்து கற்றுக் கொண்டேன், விடுமுறையில் ஊர் வரும்போது, வீட்டில் புரோட்டா போடுவதாக இருந்தால் எப்போதாவது மாவை விசிறி மட்டும் கொடுப்பதுண்டு.

எனது தந்தை மரணித்து பல வருடங்கள் கடந்து விட்டாலும், உங்களது பதிவு என் தந்தையை நினைவுபடுத்தியதுடன், எனது சிறுவயது மகிழ்ச்சியான தருணங்களையும் ஞாபகமூட்டுகிறது
" பரோட்டா " என்ற இந்தப் பதிவை ஏதோ நானே எழுதியது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

என்றும் அன்புடன்,
அ. ஹாஜாமைதீன்.

apsara-illam said...

சகோதரர் ஹாஜாமைதீன் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.
தங்கள் பதிவை கண்டு நான் நெகிழ்ந்து போனேன்.நிச்சயம் சிறுவயதில் ஏற்பட்ட இது போன்ற அனுபவங்கள் நம் மனதில் என்றும் நிற்பவை.அதை எப்போது நினைத்து பார்த்தாலுமே மகிழ்ச்சியாகவே இருக்கும்.
நீங்கள் சொல்வது போல் நாங்களெல்லாம் எங்கள் தந்தை போடும் போது சுற்றி நின்றி வேடிக்கை பார்த்துவிட்டு எல்லாம் சுட்டு முடிந்ததும் நிலா சோறு போல் நிலா பரோட்டா என மொட்டை மாடியில் எடுத்து கொண்டு போய் எல்லோரும் சேர்ந்து ஜாலியாக சாப்பிடுவோம்.இது ஒவ்வொரு முறையும் எனது தந்தை மலேசியாவில் இருந்து வந்தவுடன் நடக்கும்.
நீங்களும் உங்கள் நினைவுகளை எனது இல்லத்தில் வந்து பகிர்ந்து கொண்டது எனக்கு மிக்க மகிழ்ச்சியே....
மிக்க நன்றி சகோதரரே.....

அன்புடன்,
அப்சரா.

Anonymous said...

வ அலைக்கும் ஸலாம்.
இனிய தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்.

எத்தனையோ வலைப்பூக்களில் சமையல் பகுதியை பார்வையிட்டுள்ளேன், குறிப்பாக புரோட்டா, சால்னாவைப் பற்றி எல்லாம் படித்தாலும், பின்ணூட்டமிடும் அளவிற்கு என்னை ஈர்த்ததில்லை, ஆனால் தாங்களது இந்தப் பதிவு மட்டும் என் பழய நினைவுகளை மீட்ட காரணம் நான் முன்பே குறிப்பிட்டதுதான், எனது " தந்தை " என்ற அந்த ஒற்றை மந்திரச் சொல்.

சிறு வயதில் நான் பார்த்து பழகிய, எனது இளம் வயதில் என் தந்தை சொல்லிக் கொடுத்த அதே முறையில், எந்த மாற்றமும் இல்லாத தாங்களது பதிவை கண்டபோது வியப்பின் உச்சிக்கே சென்றுவிட்டேன், "பரோட்டா" என்ற உங்களது பதிவை எனது பேவரைட் பக்கமாக பதிவு செய்துவிட்டு அவ்வப்போது படித்து மகிழ்கிறேன்
எனது தந்தை என்னிடம் உரையாடுவது போன்ற உணர்வு.

ஏன் சகோதரி, மலேசிய சபுராளிகள் என்றாலே இப்படி ஒரே மாதிரியாகத்தான் புரோட்டா போடுவார்களோ?

என்றும் அன்புடன்,
அ. ஹாஜாமைதீன்.

apsara-illam said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே...
தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.தாங்களுக்கும் ஹஜ் பெருநாள் சிறப்பாக சென்றிருக்கும் என நினைக்கின்றேன்.இந்த பகுதியிலேயே தங்களுடைய கருத்தை மீண்டும் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி.நன்றி.
மலேசியா என்றாலே பரோட்டாதானே ஃபேமஸ்.அதே போல் அங்கு நமது அத்தாக்களை போல் பலரும் இந்த வேலைகளில் கைதேர்ந்தவர்களாக இருந்திருக்கின்றார்கள்.அதுவும் மூட்டை மூட்டையாக போடுவார்களாம்.அதையும் அவர்கள் ரசித்துதானே செய்திருக்கின்றார்கள்.இக்கால கட்டத்தில் இது போன்று தான் பார்க்கும் வேலையை ரசித்து பார்ப்பவர்கள் என்பது எண்ணிக்கையில் மிகவும் குறைவே,...

அன்புடன்,
அப்சரா.

Anonymous said...

i love you

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out