Monday, January 31, 2011

கை வேலைபாடுகள்

எனக்கு சிறு வயதிலிருந்தே ஏதேனும் புதுமையான விஷயங்கள் செய்ய வேண்டும் என்று ஆர்வம் உண்டு.ஆனால் ஆளை பார்த்தால் \\\இதெல்லாம் எதுக்கு லாயக்கு/// என்று மற்றவர்கள் நினைப்பது போல் தான் இருப்பேன்.
எதையும் செயல்படுத்த முயன்று பார்க்கவும் மாட்டேன்.சந்தர்ப்பங்களும் கிடைக்கவில்லை என்றே வைத்துக் கொள்வோம்.
 திருமணத்திற்க்கு முன்பு இரண்டு வருடங்கள் வீட்டிலேயே பொழுதை கழித்து கொண்டிருக்கும் போது ஏதாவது கை வேலைபாடுகள் செய்து பார்ப்பேன்.சின்ன பொம்மைகளுக்கெல்லாம்... சுடிதார் தைத்து போட்டு பார்ப்பது என்றெல்லாம் என் பொழுதை கழித்து வந்தேன்.
திருமணம் முடிந்து துபாய்க்கு வந்ததும் எனது கணவர்,குழந்தை என்றே சிறிது காலம் சென்ற பின் கடந்த மூன்று வருடங்களாக தான் இந்த கம்ப்யூட்டரோடு உட்கார ஆரம்பித்தேன்.இதன் மூலம் நிறைய விஷயங்களை கற்று கொள்ள முடிந்ததோடு அல்லாமல் நமக்கு தெரிந்தவகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளமுடியும் என்றும் உணர்ந்தேன்.அறுசுவை தளத்தில் பலவிதமான கைவேலைபாடுகளை பல தோழிகள் தன் திறமைகளை கொண்டு வெளிபடுத்தி வந்தனர்.
அதனை பார்த்து சிலவற்றை செய்து பார்த்ததுண்டு.அதன் புகைபடம் இங்கே வெளியிடலாம் என்று உள்ளேன்.சொந்த முயற்ச்சி இல்லைதானே...அதற்க்கு ஏன் இந்த ஆர்ப்பாட்டம் என்கிறீர்களா...?கொஞ்சம் வித்தியாசமாகவும் செய்து பார்த்ததால் வெளியிடுகிறேன்.அதனுடைய செய்முறைக்கான லின்க்கை கீழே கொடுத்துள்ளேன்.அங்கும் சென்று பார்க்கவும். 





இந்த படத்தில் தெரிபவை அறுசுவையில் திருமதி.செண்பகா அவர்கள் செய்து காட்டிய ***அழகிய ஜுவல் பாக்ஸ் *** என்ற கை வேலைபாடை பார்த்து நான் செய்தது.செய்திதாள் பேப்பரை கொண்டு செய்யகூடியவை.
எப்படியெல்லாம் யோசித்து செய்திருக்காங்க... அவங்களை பாராட்டணும்.
செய்ய நேரம் எடுப்பினும் ஆரம்பித்ததும் ஆர்வம் கூடிடுச்சு... எனவே மூன்று விதமாக செய்து பார்த்தாச்சு.

அதன் லின்க்:- http://www.arusuvai.com/tamil/node/14435

இந்த ஐடியாவை கொண்டு வேறு மாதிரி என்ன செய்யலாம் என்று யோசித்த போது அப்போது தோன்றியது..... துபாயில் பிரபலமானதும், உலகபுகழுக்கும் உரிய கட்டிடமான   *** புர்ஜ் கலீஃபா ***    கட்டிடம்... அதை செய்ய இந்த முறை சரியாக இருக்கும் என்றே எண்ணினேன்.செய்தும் பார்த்தேன்.... என்ன கலரிங் தான் கம்ப்ளிட் பண்ண முடியல அதற்க்கு தகுந்த பெய்ண்ட் எனக்கு அருகில் உள்ள இடங்களில் கிடக்கவில்லை.வேறு எங்கேயும் தேடி போய்  வாங்க முடியவில்லை.(எல்லாம் ஒரு அலுப்புதான்னு வச்சிக்கங்க...)என்ன செய்ய செய்தாச்சே..... அப்படியே புக் செல்ஃப் மேலே அமர்ந்திருக்கின்றது.அது உங்கள் பார்வைக்கு....
 
அதன் பிறகு அதே  அறுசுவை  பகுதியில் கவிசிவா என்ற தோழியின் *** களிமண் கொண்டு பூக்கூடை *** என்ற கை வேலைபாடு என்னை மிகவும் கவர்ந்தது.அதற்க்கான பொருட்களும் எனக்கு கிடைத்ததால் செய்து பார்க்க முடிந்தது.குழந்தைகள் விளையாடும் க்ளே கொண்டு செய்யும் வேலை இது.... (என்னா மாதிரி யோசிக்கிறாங்க இல்ல...)அதையும் செய்து பார்த்துடலாமுன்னு அதன் வேளையில் இறங்கிட்டேன்.க்ளேயில் எத்தனை விதமாக விற்க்கிறதுன்னு அப்பதான் தெரிஞ்சுக்கிட்டேன்.அதன் 

படமும்,லின்க்கும்:-







 http://www.arusuvai.com/tamil/node/14404

 இந்த ஐடியாவை கொண்டு வேறு என்ன மாதிரி செய்யலாமுன்னு  யோசித்த போது குருவி கூண்டு போல் செய்து பார்க்கலாமுன்னு தோணுச்சு.... (வாங்கிய க்ளே வீணாக்காம இதையாவது செய்வோமுன்னு தான்...)
 செய்தும் பார்த்தாச்சு.என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்திருந்தது.\\\ இதை விட எனக்கு என்ன வேணும்/// கவிசிவாக்கு தான் நான் நன்றி சொல்லணும்.
என் குழந்தைகள் அதை பொக்கிஷமாக வச்சி இருக்காங்க.....
இன்னும் நிறைய செய்து பார்க்கணும்,கற்று கோள்ளணும்னு ஆசை.... தையல் கற்று கொள்ளலாமுன்னு தையல் மிசின் வாங்கினேன்.அதில் இப்போதைக்கு கவுண்டமணி சொல்றாமாதிரி.... கிளிஞ்சது... கிளியாதது... ஒட்டு போடுறதுக்கு இப்படிதான் யூஸ் ஆகிட்டு இருக்கு.நிறைய சகோதரிகள் நிறைய விஷயங்களை,திறமைகளை வெளிபடித்தியிருக்காங்க....
அதையும் கூடிய சீக்கிரம் கத்துக்கணும்.

 எனக்கும் ஓரளவிற்க்கு பார்ப்பதையாவது செய்ய வரும்னு என்பதற்க்கு ஊண்றுகோளாக  இருந்த அருசுவைக்கும்,அருசுவை தோழிகளுக்கும் எனது நன்றிகள் பல......

 அடுத்த பகுதியில் எனது மாமியார் அவர்களின் கைவண்ணத்தை வெளியிடலாம் என்றிருக்கின்றேன்.அவர் மிகவும் கலை ஆர்வம் உள்ளவர்.தையல்,பூ வேலைபாடுகள் என அசத்துபவர்.ஃபோட்டோக்களோடு விரைவில் இந்த பகுதியில் மீண்டும் வருகிறேன்.....(இன்ஷாஅல்லாஹ்)


அன்புடன்,
அப்சரா.

14 comments:

ஜெய்லானி said...

//இன்னும் நிறைய செய்து பார்க்கணும்,கற்று கோள்ளணும்னு ஆசை.... தையல் கற்று கொள்ளலாமுன்னு தையல் மிசின் வாங்கினேன்.அதில் இப்போதைக்கு கவுண்டமணி சொல்றாமாதிரி.... கிளிஞ்சது... கிளியாதது... ஒட்டு போடுறதுக்கு இப்படிதான் யூஸ் ஆகிட்டு இருக்கு.//

எல்லாமே ஆரம்பத்துல அப்படித்தானே இருக்கும் :-)) அப்படியே ஊசியில நூல் கோக்குறது எப்படின்னு சொல்லிக்குடுங்க (( இதை மஹி பாக்காம இருக்கனுமே )) :-)))))

ஜுவல் பாக்ஸ் , குருவிக்கூடை , புருஜ் கலிஃபா எல்லாமே சூப்பரா இருக்கு

Anonymous said...

கை வேலைப்பாடுகள் அனைத்தும் அருமையாக இருக்கிறது அப்சரா
அன்புடன்
ரிதா

Asiya Omar said...

அருமை.அப்சரா.அறுசுவை பல தோழிகளின் திறமை வெளிப்பட காரணமாயிருந்தது உண்மையில் பாராட்டப்படவேண்டிய விஷயம்.வாழ்த்துக்கள்,தொடர்ந்து அசத்துங்க.

ஸாதிகா said...

சூப்பர் அப்சரா.இத்தனை திறமைகளை உள்ளடக்கிக்கொண்டு //ஆனால் ஆளை பார்த்தால் \\\இதெல்லாம் எதுக்கு லாயக்கு/// என்று மற்றவர்கள் நினைப்பது போல் தான் இருப்பேன்// இப்படி வரிகள் தேவையா?தொடர்ந்து உங்கள் திறமைகளை வெளிப்படுத்துங்கள்.கண்டு பாராட்ட காத்திருக்கின்றோம்.

apsara-illam said...

சகோதரர் ஜெய் அவர்களே...,முதல் ஆளாக வந்து கருத்து தெரிவித்தமைக்கு நன்றி.
///அப்படியே ஊசியில நூல் கோக்குறது எப்படின்னு சொல்லிக்குடுங்க ////
இது குசும்பு தானே....
எங்கே மஹி போய்ட்டீங்க...?வாங்க ஜெய்லானி சகோதரரை எப்படி ஊசியால குத்தலாமுன்னு யோசிப்போம்.....

அன்புடன்,
அப்சரா.

apsara-illam said...

எனது இல்லத்திற்க்கு வருகை தந்துள்ள ரிதா அவர்களை வருக வருக என வரவேற்கிறேன்.
தங்கள் கருத்துக்கும் எனது நன்றிகள் பல....

அன்புடன்,
அப்சரா.

apsara-illam said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஆசியா அக்கா...,சரியா சொன்னீங்க...தங்கள் கருத்துக்கும்,வாழ்த்துக்கும் நன்றிக்கா...

அன்புடன்,
அப்சரா.

apsara-illam said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஸாதிகா அக்கா...,வந்து என்னை ஊக்குவிக்கும்படி பாராட்டியதற்க்கு மிக்க நன்றி.
உங்களை போன்ற அதிக திறமை வாய்ந்தவர்கள் பாராட்டக்கூட வேண்டாம்.என் பக்கம் வந்து பார்த்தாலே போதும் எனக்கு அவ்வள்வு மகிழ்ச்சியாக இருக்கும்.
மிக்க நன்றி அக்கா...

அன்புடன்,
அப்சரா.

Anonymous said...

very nice

apsara-illam said...

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி மஹா....

அன்புடன்,
அப்சரா.

Mahi said...

/அப்படியே ஊசியில நூல் கோக்குறது எப்படின்னு சொல்லிக்குடுங்க (( இதை மஹி பாக்காம இருக்கனுமே )) :-)))))/
/எங்கே மஹி போய்ட்டீங்க...?வாங்க ஜெய்லானி சகோதரரை எப்படி ஊசியால குத்தலாமுன்னு யோசிப்போம்...../

இதோ வந்துட்டேன்,வந்துட்டேன்!! ஜெய் அண்ணா முதல்ல ஊசி காதுல ஒட்டகத்தை நுழைச்சுக்காட்டுங்கோ,அப்பறமா நூல் கோக்கலாம்,ஓக்கை?! :)))))))))))

கைவேலைகள் எல்லாமே அழகா இருக்கு அப்ஸரா! புர்ஜ் டவர் கலர் பண்ணாமலே சூப்பரா இருக்கு!

apsara-illam said...

வாங்க மஹி..., ஜெய் சகோதரரை காணுமே.... உங்கள் பதிவை பார்த்துட்டு என்னை ஆளை உட்டுடுங்கன்னு எஸ்கேப் ஆயிட்டாரா... என்னா?
தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி மஹி...

அன்புடன்,
அப்சரா.

ஜெய்லானி said...

//இதோ வந்துட்டேன்,வந்துட்டேன்!! ஜெய் அண்ணா முதல்ல ஊசி காதுல ஒட்டகத்தை நுழைச்சுக்காட்டுங்கோ,அப்பறமா நூல் கோக்கலாம்,ஓக்கை?! :)))))))))))///

இதென்ன சின்ன புள்ளாதனமா இல்ல இருக்கு ....முதலல நூல் கோக்க கத்து குடுங்க....அப்புரம் பாருங்க ஒட்டகம் என்ன ஒட்டக சிவிங்கியே உள்ளே போகும் ஹா..ஹா..

apsara-illam said...

சபாஷ்.... சரியான போட்டி... மஹி மற்றும் ஜெய் சகோதரர் அவர்களே...

அன்புடன்,
அப்சரா.

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out