Wednesday, November 2, 2011

எங்கள் வீட்டின் கை வண்ணம்



எனது இல்லத்தில் இதற்க்கு முன் எனது கைவண்ணம் என்று சில எனக்கும் தெரிந்தவற்றில் செய்ததை உங்களோடு பகிர்ந்து கொண்டிருந்தேன்.அப்பகுதியிலேயே எனது மாமியார் நிறைய விஷயங்களை கற்றறிந்தவர் அவரது திறமைகளையும் இங்கே வெளீயிடுவதாக சொல்லியிருந்தேன்...சரி சரி எதற்க்கு இத்தனை ஃப்ளாஷ்பேக் மேட்டருக்கு வா என்கின்றீர்களா...?அதாங்க.... இங்க தாங்க மேட்டரே.... எனது மாமியார் நிறைய கைவேலப்பாடுகள் செய்வதில் சகலகலா வல்லவர்.தனக்கு தெரிந்தவைகள் என்று மட்டுமல்லாது புதுமையாக பார்ப்பவற்றையும் தெரிந்து கொண்டு செயல்பட முனைபவர்.
இதற்க்கென்று மெனக்கெட்டு வாங்கி வந்து செய்வது என்று ஆரம்பிக்க மாட்டார்.ஏதேனும் வேஸ்ட் பொருட்களோ,உடைந்த பொருட்களோ கையில் அகப்பட்டால் அவ்வளவுதான் அவருக்கு டிங்.... என்று ஒரு மணி அடிக்க என்னவெல்லாம் இதில் செய்யலாம் என்று பல யோசனைகள் பிறக்கும். 
அப்படி செய்த விஷயங்கள் நிறைய உண்டு.அதில் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ளவே இங்கு வந்தேன்.




இந்த பூக்கள் கொத்து செய்தது எப்படி தெரியுமோ...?ஸ்பாஞ் பேப்பர் பல கலர்களில் விற்க்கும் அதை வாங்கி செய்வார்கள் இல்லையா..?அப்படி எல்லாம் என் மாமியார் வாங்க சிரமபடவே இல்லை.சில காஸ்ட்லி ஷர்ட்டுக்கு,ட்ரஸ்க்கு உள்ளே வைத்து இது போன்ற தாள்கள் வரும் அல்லவா..?அதையெல்லாம் சேகரித்து வைத்து தான் அதில் இந்த ரோஸ்,அதற்க்கான இலைகள் எல்லாம் செய்து அதனை கலரிட்டு வைப்பார்கள்.அந்த பூங்கொத்தின் கீழே ஃப்ளவர் வாஷ் எதனால் உருவானதென்றால் எலெக்ட்ரானிக் பொருட்களை சுற்றி வரும் தெர்மோகோல் மூலம் செய்ததாக்கும். ஏனோ ஃபோட்டோவை சரியாக என்னால் எடுக்க முடியவில்லை.நேரில் இது இன்னும் அழகாக இருக்கின்றது.
இது மட்டுமல்லாது,தையல் வேலைகளிலும் நன்கு சிறந்தவர்.தலையணையை கூட மீன் வடிவத்தில்,ஹார்ட் வடிவத்தில் என தைத்திருப்பார்.குழந்தைகள் விரும்பும் வண்ணம் இருக்கும்.அது தற்போது கைவசம் இல்லாததால் இங்கே வெளியிட முடியவில்லை.முடிந்த போது அதை இங்கே சேர்த்து விடுகிறேன்.சரி அடுத்தது என்ன என்று பார்ப்போமா...?
இவைகள் எங்கள் வீட்டில் அலங்கரிக்கபட்டிருப்பவைகள்.
இது ஒரு மரப்பலகையை கொண்டு செய்திருப்பது என்று ஓரளவு கனித்திருப்பீர்கள்.அதன் ஓரங்களில் இருப்பது என்ன தெரியுமோ...?தானிய வகைகள்.அரிசி,பச்சைபயிர்,வெள்ளை ,மற்றும் கறுப்புஉளுந்து,கேழ்வரகு,சீரகம்,மிளகு,கடுகு,கோதுமை,தனியா,கிராம்பு,எள் இவைகளை கொண்டு அலங்கரித்ததாகும்.இதனை எனது சிறிய நாத்தினாரும்,அவள் கஸினும் படித்து கொண்டிருக்கும் போது சேர்ந்து செய்தது.நடுவில் இருக்கும் ஃபோட்டோ எனது மகளுடையது.மேலே கண்ணாடியை கொண்டு கூட ஃப்ரேம் செய்யவில்லை.ஆனாலும் அப்படியே அழகாக சுவரில் இன்னும் காட்சி அளிக்கின்றது.அவர்கள் செய்த மற்றுமொரு கைவண்ணம் தான் கீழே நீங்கள் பார்க்கும் அழகிய வீடு.

இது ஐஸ் குச்சியினால் செய்த வீடாகும்.இதை இன்னும் அழகுபடுத்தியிருந்தார்கள்.அவை எல்லாம் கொஞ்சம் விழுந்துவிட்டது.இது போன்று இன்னும் பல கைவண்ணங்கள் எங்கள் வீட்டின் ஆங்காங்கே அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.அவற்றை மற்றுமொரு பகுதியினில்,நேரம் கிடைக்கும் போது பகிர்ந்துக் கொள்கிறேன்.

*** நன்றி ***


8 comments:

ஸாதிகா said...

அட..ரொம்ப அழகாக உள்ளது அப்சரா.அதிலும் ரோஜா போட்டோ பிரேம் சூப்பர்.

முற்றும் அறிந்த அதிரா said...

ஆஹா அனைத்தும் சூப்பர் அப்ஷரா... மாமியைப் பார்த்து நீங்களும் பழகிக்கொள்ளுங்கொ.

apsara-illam said...

சலாம் ஸாதிகா அக்கா...தங்கள் வருகைக்கும்,கருத்திட்டமைக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்,
அப்சரா.

apsara-illam said...

வாங்க அதிரா....தங்கள் கருத்து கண்டு மகிழ்ச்சி
மிகவும் நன்றி.
ஏதோ நீங்கள் சொன்னது போல் முயற்ச்சிக்கிறேன் பா.... அந்த அளவிற்க்கு எனக்கும் வரணும்ல....

அன்புடன்,
அப்சரா.

Mahi said...

பூக்கள் அழகா இருக்கு அப்ஸரா! எல்லாமே நல்ல கைவேலைகள்!சூப்பரா இருக்கு.

Asiya Omar said...

super apsara.nice sharing.

Unknown said...

romba arumai..

Kamaludeen said...

அஸ்ஸலாமு அலைக்கும்,
தங்கள் வலையினை முதன் முதலாக பார்க்கிறேன். முதலில் குறை சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள். கைவேலை அருமை. அனால் அதனை சுவரில் மாட்டுவது தவறு. இனி நிறைகளையும் கூறுவேன். நன்றி.
---ரோஸ்னா

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out